breaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழக பாஜக தலைவர் மாற்றம் மற்றும் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துதல் ஆகிவற்றின் மூலம் மீண்டும் தென் இந்திய அரசியலுக்கு தற்போது பாஜக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற தென் மாநிலங்களிலான தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் பாஜக வெற்றி பெற தவறியது, இதில் கேரளாவில் பாஜக வெற்றிபெற முடியவில்லை என்றாலும் 13% வாக்குகளுக்கு அதிகமாக பெற்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது.

ஆந்திராவில் கூட்டணி அமையாத காரணத்தால் பாஜகவால் வெற்றியை பெற இயலவில்லை இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டு களத்தில் போட்டியிட்டது பாஜக.

READ  திருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல வாரியம் !

பாஜக தமிழகத்தில் 3 தொகுதிகளை வெல்லும் என்று டெல்லி தலைமைக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது, ஆனால் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. இதனை மோடி மற்றும் அமிட்ஷா ஏற்றுக்கொள்ளவில்லை.

Loading...

தோல்வி குறித்த ஆராய்ந்த போது தமிழக பாஜகவில் உயர்மட்ட பொறுப்பில் உள்ள சில தலைவர்கள் தமிழகத்திற்குள் பல்வேறு அணிகளாக பிரிந்து கோஷ்டி பூசலில் ஈடுபடுவதும், தமிழக பாஜகவில் தங்கள் ஆதரவான ஆட்களுக்கு பொறுப்பு வாங்கி கொடுப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.

இதனை அறிந்த டெல்லி தலைமை தமிழக பாஜகவில் ஒட்டுமொத்த மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளது, குறிப்பாக பாஜக தலைவர் மாற்றத்தின் போது கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்லக்கூடிய நபருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியினை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

READ  மலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்தது.

அதன்படி பிரதமர் மோடி இந்த மாதம் தமிழகம் வந்த ஒரு வாரத்திற்குள் இந்த மாற்றம் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் அறிவுறித்தியுள்ளன, மேலும் இதன் அடிப்படையில்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற உத்தரவையும் தமிழக பாஜகவிற்கு டெல்லி தலைமை கொடுத்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக தற்போது பொறுப்பில் இருக்கும் தமிழிசையின் பதவி காலம் முடிவடைந்து விட்டது இந்த சூழலில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் போட்டியில் H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் மற்றும் புது முகம் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் மாற்றம் தொண்டர்களை அரவனைத்து செல்பவராகவும், கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

READ  ஓசியில் பஜ்ஜி சாப்பிடவா அனுப்பினோம் ராசாவை காரில் இருந்து தூக்கிய விரட்டி அடித்த மக்கள் அத்துடன் கனிமொழி குறித்தும் கேட்டாங்க பாரு ( விடுபட்ட வீடியோ இணைப்பு )

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் 3 வாரத்திற்குள் உறுதி…

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here