இந்திய வீரர் அபிநந்தனை காமெடியனாக மாற்றி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ஊடகம்( video )

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவாவில் ஜெய்ஷ் இ மொஹம்மது என்ற பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில்,

நமது இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர், அதை தொடர்ந்து இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அளிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தனது போர் விமானங்களை அனுப்பியது அப்போது அதை இந்திய விமானப்படை விமானங்கள் துரத்திச்சென்றன.

அதில் அபிநந்தன் என்ற தமிழகத்தை சேர்ந்த விமானப்படை விமானி பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார் , அவரை மிரட்டி சில விடியோக்களை எடுத்து வெளியிட்டது பாகிஸ்தான்.

READ  வெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.

தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்கான விளம்பரம் ஒன்றை இஸ்லாமாபாத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஜாஸ் டிவி என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் அபிநந்தன் போன்ற ஒருவரிடம் பாகிஸ்தான் அணியினர் இந்திய அணி குறித்த விவரங்களை கேட்பது போலவும் அதற்கு அவர் நான் அதை சொல்ல முடியாது என்று பயந்துகொண்டே பதில் சொல்வதுபோலவும்.

இறுதியில் அவரை போகச்சொல்லிவிட்டு நிறுத்தி கையில் உள்ள கோப்பையை ( கப் ) கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று உலகக்கோப்பையை சுற்றிக்காட்டியுள்ளனர்.

அபிநந்தன் பாகிஸ்தானில் டீ கொடுத்ததை கேலி செய்யும் விதமாக இதுபோன்ற விடீயோவினை பாக்கிஸ்தான் ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன, இது இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானிற்கு வாழட்டும் பலர் இதனை பார்த்து திருந்தட்டும் என்றும் கொதித்துள்ளனர்.

READ  கட்டாய மதமாற்றம் செய்தால் இனி தூக்கு அமெரிக்காவிற்கு இந்தியா ஒரே நாளில் பதிலடி.

©TNNEWS24

அந்த வீடியோ

இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் #banJazzTv #OurHeroAbinanthan #Jaihind என்ற ஒரு துவக்கத்தை நமது TNNEWS24 துவங்கியுள்ளது , நமது இந்திய தேசத்தின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்ற தமிழகத்தின் குரலாய் நாம் எழுவோம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here