அதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

நடிகர் சந்தானம் நிச்சயம் அரசியல் களத்தில் களம் இறங்குவார் என்று பல முன்னணி இணையதளங்கள் தொடங்கி பலரும் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை இதுநாள் வரை வெளியிட்டு வந்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைத்துள்ளது.

நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதி இருவரும் நெருங்கிய நண்பர்கள் பட வாய்ப்புகளில் படு பிஸியாக சந்தானம் இருந்த காலகட்டத்திலேயே உதயநிதிக்காக, சந்தானம் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

Loading...

அப்படி இருவரும் இணைத்திருந்தாலும் சந்தானத்தின் அரசியல் வருகை சற்று திமுக தரப்பிற்கு வெறுப்பினை தரவில்லை என்றாலும் வருத்தத்தை கொடுக்கும். பாமக என்ற கட்சியினை எப்படியும் பல துண்டுகளாக உடைந்துவிடும் எண்ணத்தில்தான் திமுக தேர்தல் காலங்களில் வேல்முருகன் மற்றும் பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது.

READ  பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல...

குறிப்பாக தனது ஆதரவு பத்திரிகையாளர்கள் மூலம் தொடர்ந்து பாமாவிற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை முன்னிறுத்தியது, இதனை பாமக தலைமை கண்டித்த போதும் ஊடகங்கள் அதனை நிறுத்தும் விதமாக இல்லை.

இந்நிலையில்தான் பாமக முகமாக உள்ள அன்புமணியை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் செந்தில் என்பவரை களம் நிறுத்தி அதில் வெற்றியும் கண்டது இதுபோன்ற பல வேலைகளை திமுக பாமாவிற்கு எதிராக செய்தாலும் மத்திய அரசின் ஆதரவு, மற்றும் அதிமுகவில் பன்னீர் செல்வம் மற்றும் முனுசாமி ஆகியோரின் ஆதரவு ஆகியவை அரசியல் அரங்கில் பாமக தொடர்ந்து இயக்கத்தினை நடத்துவதற்கு ஆதரவாக இருந்துள்ளது.

இந்நிலையில்தான் பாமக இனி அரசியல் அரங்கில் ஜொலிக்காது அதில் புதுமுகங்கள் இடம்பெறாது என்று திமுக கணக்கு போட்ட நேரத்தில் நடிகர் சந்தானம் அரசியலுக்கு வருவது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் அதிலும் தனதுசமூகத்தினர் மத்தியில் சந்தானத்திற்கு என்று மதிப்பு உண்டு, சந்தானம் பாமகவில் இணைந்து வாக்குகளை சேகரிக்கும் போது நிச்சயம் திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் சிதறிக்கிடக்கும் வன்னியர் சமூகத்தின் வாக்குகள் நிச்சயம் ஒருங்கிணைக்கும்.

READ  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி ! 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்?

தற்போது சந்தானத்தின் அரசியல் வருகை கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது அதிலும் குறிப்பாக தனது புதுப்படமான A1 திரைப்படம் திரைக்கு வந்த பிறகு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசியலில் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சந்தானம் களத்திற்கு வருவார் என்று நாம் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறோம் தற்போது அது நிறைவேறிவிட்டது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here