புதிய கல்வி கொள்கை என்றால் என்ன? கேள்வி கேட்ட பத்திரிகையாளர் பாதியில் தெறித்து ஓடிய விஜயின் தந்தை !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

நடிகர் சூர்யா இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் புதிய கல்வி கொள்கை கிராமப்புற இளைஞர்களை பதிக்கும் என்றும் அதனை மத்திய அரசு திணிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

அதுகுறித்த விவாதங்கள் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு பக்கங்களில் இருந்தும் கிளம்பின வழக்கமாக பாஜகவின் எந்த செயலையும் எதிர்க்கும் திராவிட கழகம், வி சி க, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சூர்யாவின் கருத்தை வரவேற்று பேசினர். அதே நேரத்தில் திரை துறையை சார்ந்த பிரபலங்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவளித்தனர். அந்த வகையில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் எப்போதும் பாஜகவிற்கு எதிராக கருத்து சொல்லும் மனநிலையில் இருப்பவர்.

Loading...

சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வர போகிறது என்று தெரிந்தவுடன் இனி அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையவேண்டியதுதான் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையில் சென்றவாரம் நடிகர் சூர்யா பேசியதுசரிதான் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடாது என்று என்ன ஏது என்றுகூட கேட்காமல் ஆதரவளித்தார்.

READ  உலகின் வலிமையான தலைவர் மோடி தான் ! இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் ! உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளினார்.

பத்திரிகையாளர் பாண்டே உள்ளிட்ட பலர்
புதிய கல்வி கொள்கையில் சமூகநீதி பாதுகாக்கப்படுவதாகவும் உன்மையில் கருத்து சொல்பவர்கள் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை படித்து பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் நுனி புல்லை மேய்ந்துவிட்டு பதில் சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று மாலை 6 மணிக்கு இயக்குனரும் விஜயின் தந்தையுமான சந்திரசேகர் சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங்மாலிற்கு வருகை தந்திருந்தார், அப்போது அங்கு வந்திருந்த தனியார் இணைய பத்திரிகை நிருபர் சார் வணக்கம் நீங்கள் நடிகர் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை குறித்த கருத்திற்கு ஆதரவு அளித்தீர்கள் இப்போதும் அதே முடிவில் இருக்குறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு டெபினெட்ல்லி 100% உறுதியாக இருக்கிறேன் மாறுதல்களே இல்லை என்று குறிப்பிட்டார்.

READ  முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பிரமாண்டமாக அரசியல் கட்சியில் இணைகிறார் ! மீண்டும் அரசியலில் அழகிரி

அதனை தொடர்ந்து நிருபர் பாஜக மற்றும் பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து சிலர் படிக்காமலே கருத்து தெரிவித்து வருவதாகவும், படித்தால் அதில் பல சாதகமான அம்சம் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்களே? நீங்கள் புதிய கல்வி கொள்கையை படித்தீர்களா என்று கேட்க?

சிறிது நேரம் முழித்த சந்திரசேகர் அதை படித்தேன் ஆனால் முழுமையாக படிக்கவில்லை என்றார், சரி நீங்கள் படித்தவரை எது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் என்று கேட்க?..

அவ்வளவுதான் முழிக்க ஆரம்பித்தவர், எந்த சேனல் எங்க இருந்து வருகிறீர்கள் டெல்லி அனுப்பியதா என்று வெடவெடத்து பாதியில் மாலில் இருந்து திரும்பி பாக்காமல் ஓடிவிட்டார் அவர் உடன் வந்தவர்களும் உடனடியாக இடத்தை காலி செய்துவிட்டனர்.

READ  நடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை !

நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சந்திரசேகர் ஓடியதை பார்த்தால் அவர் பாண்டே சொல்லியதுபோல புத்தகத்தை படிக்கவில்லை போல?

தற்போது இணையவாசிகள் சந்திரசேகரை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here