பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியான கஸ்தூரி தன் வேலையை ஆரம்பித்தார்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நேற்று பிக்பாஸ் வீட்டில் 46 ஆம் நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சேரனும் சரவணனும் இருந்தார்கள்.அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது.பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து சமாதானம் செய்து வைத்துவிட்டார்.

ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என அனைவரும் நினைக்கும் நேரத்தில், திடீரென சில பெண்கள் குறித்து பேசிய கருத்தின் காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் பிக்பாஸ் கூற, சரவணனும் வெளியேற, சக போட்டியாளர்கள் காரணம் என்னவென்று தெரியாமல் முழித்தனர்.

READ  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சுந்தர் பிச்சை வைத்த ஆப்பு ! புலம்பும் திமுகவினர்.

இப்படியே இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கையில்,இன்று சரவணனின் இடத்தை நிரப்புவதற்கு நடிகை கஸ்தூரி வீட்டுக்குள் வருகிறார்.இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில், ஒரு பெரிய கிப்ட் பாக்ஸ் வைக்கப்பட்டது .போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே பரிசு இருக்கும் என்ற ஆவலோடு பெட்டியை திறந்தால் உள்ளே கஸ்தூரி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அனைவரிடமும் பேசிவிட்டு, சாக்‌ஷியை நோக்கி ‘எனக்கு உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என கூறுகிறார்.

இரண்டாவது வெளியான ப்ரோமோவில் அனைவரிடமும் கேள்வி கேட்கிறார் கஸ்தூரி.ஏன் நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்க ? என தர்ஷனிடம் கேட்க, தர்ஷனோ மக்கள் என்னை பார்க்க வேண்டும் என கூறுகிறார்.பின்பு, ஷெரினிடம் கேட்டால், நான் தர்ஷனுக்காக வந்தேன் என சிரித்துக்கொண்டே கூற, அனைவரும் சிரிக்க,இப்படியே ப்ரோமோ முடிகிறது.

Loading...
READ  பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது !

வீட்டிற்குள் வந்தவுடன் அனைவரையும் கேள்வி கேட்க தொடங்கிய கஸ்தூரியை சக போட்டியாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும். இனி என்னென்ன பிக் பாஸ் வீட்டில் அரங்கேற காத்திருக்கிறதோ.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here