காஷ்மீரில் கலவரம் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மிரட்டிக்கொண்டிருக்க இந்த அஜய் தோவலுக்கு குசும்பை பார்த்தீர்களா காஷ்மீரில் என்ன செய்கிறார் என்று !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீர்.,

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நேற்றுடன் முடிவிற்கு வந்துள்ளது, இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கிறார் தற்போதைய பிரதமர் மோடி.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மாநில மக்களை முன்னேற்றுவதற்கு பதில் அவர்களை தீவிரவாத நடவடிக்கைக்கு உட்படுத்துவதாகவும் இதனால் காஷ்மீரிகள் எந்த முன்னேற்றமும் அடையமுடியவில்லை என்பதனால் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெரிவித்தார்.

Loading...

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது காஷ்மீரில் மிக பெரிய போராட்டத்தை உண்டாகும் என்றும் இதனை இளைஞர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் குற்றம் சுமத்தி இருந்தார்.

READ  இந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி

இடதுசாரிகள்,திமுக, ஓவைஸி, வைகோ உள்ளிட்டோரும் இது உள்நாட்டு போர் மூளும் வாய்ப்பை உருவாக்கிவிடும் என்று உணர்ச்சி பொங்க பேசினர். ஆனால் தற்போது காஷ்மீரின் நிலைமை மிகவும் அமைதியாக உள்ளது இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. ஒரு கட்டம் மேலே சென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் புல்வாமா போன்ற தாக்குதல்கள் உண்டாகும் என்று இந்தியாவை எச்சரித்தார்.

ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் இன்று காஷ்மீர் சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் காஷ்மீர் மக்களுடன் சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டு அந்த படத்தை பாகிஸ்தான் மீடியாக்களுக்கு ப்ரத்தியேகமா வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் உள்ளே வர நினைத்தால் நீங்களும் பிரியாணிதான் என்று சிம்பாலிக்காக சொல்வதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட தற்போது ட்விட்டரில் இந்திய பாகிஸ்தான் இளைஞர்கள் மிக பெரிய யுத்தமே நடத்தி வருகின்றனர்.

READ  என்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை வச்சாங்க ஆப்பு ! தமிழகத்திலா இப்படி ஒரு மாற்றம்

இருந்தாலும் தோவல் குசும்பை பார்த்தீர்களா?

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here