அஜித்துடன் மீண்டும் வில்லனாக மோத இருக்கும் அருண்விஜய்…படப்பிடிப்பு எப்போது..?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

அஜித் நடித்து வெளிவந்த “நேர்கொண்ட பார்வை ” திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பாலியல் பிடியில் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவிக்கும் 3 பெண்களை பற்றிய கதை இது. அந்த பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வெற்றிகரமாக இந்த வழக்கை முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வக்கீலாக அஜித் நடித்துள்ளார்

அஜித்தின் திரையுலக வரலாற்றில் இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும் இந்தப்படம் திரைக்கு வந்த 7 நாட்களில் 50 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.வெளிநாடுகளிலும் அதிக வசூலை பெற்றுள்ளது. தற்போது அஜித் குமார் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக உடல் இடையை குறைத்துக்கொண்டு வருகிறார். அந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த மாத கடைசியில் படத்தை தொடங்க உள்ளனர். இந்த படம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

இந்த படத்தில் அஜித் மோட்டார் சாகசங்கள் செய்யும் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் நடிக்க இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண்விஜய்யிடம் படக்குழுவினர் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து கலக்கியிருந்தார், மேலும் ரசிகர்களின் வரவேற்ப்பையும் பெற்றிருந்தார் அருண்விஜய். அந்த படத்திற்கு பிறகு அருண்விஜய்க்கு பட வாய்ப்புகளும் அதிகமாயின. மீண்டும் அஜித்துடன் அருண்விஜய் நடித்தால் , அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
READ  காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here