மீண்டும் அதிரடி கதையில் அஜித்..ரசிகர்கள் கொண்டாட்டம்

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

நடிகர் அஜித் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வந்தார். வேதாளம், விஸ்வாசம் படங்களில் தாதா வேடம் இட்டு வில்லன்களுடன் மோதினார். தற்போது திரைக்கு வந்துள்ள “நேர்கொண்ட பார்வை” படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் மூலம் இன்னொரு நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலும் குவிகிறது. இந்த நிலையில் மீண்டும் அதிரடி கதையில் நடிக்க அஜித் தயாராகியுள்ளார்.இந்தப் படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த படம் குறித்து போனிகபூர் கூறியதாவது.

READ  ஐயா அது நான் இல்லை பல்டி அடித்தார் விஜய்சேதுபதி முட்டு கொடுத்தவர்கள் நிலைமை !

“அஜித் நடிக்க உள்ள புதிய படம் முழுமையான அதிரடி சண்டை படமாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். பைக் மற்றும் கார் பந்தய சாகச காட்சிகள் படத்தில் இடம்பெறும். குறிப்பாக பைக் பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்கிறேன். இந்தியில் வெளியிடுவது பற்றயும் யோசிப்பேன் என்று போனிகபூர் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here