#Alert யாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது காஷ்மீரில் 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது உள்துறை அமைச்சகம்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

டெல்லி.,

உள்துறை அமைச்சர் அமிட்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நாளை காஷ்மீரில் எவ்வாறு செயல்படுவது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் அமிட்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல், உளவுத்துறையினர், ரா அமைப்பினர் கலந்துகொண்ட முக்கிய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது அதில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம் மூன்றாக பிரிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் அதனை எவ்வாறு கையாளுவது என்ற முக்கிய ஆலோசனைகள் இன்று எடுக்கப்பட்டுள்ளன.

அதன் படி காஷ்மீரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் முக்கிய முடிவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக அரசு அதிகாரிகள் யாரும் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்வதோ விடுமுறையில் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன

READ  கோவையில் முஸ்லீம் இளம்பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாற வற்புறுத்திய இருவர் கைது

ஆலோசனையில் கொடுக்கப்பட்ட உத்தரவுகள்

அஜீத் டோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
அர்விந்த் குமார், புலனாய்வு பிரிவு, சமந்த் கோயல், ரா உளவுத்துறை தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய ஆலோசனை முடிந்தது…

நாளை காலை, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது…

1)அதிகாரிகள் யாரும் நாளையில் இருந்து விடுமுறை எடுக்க கூடாது

2)காஷ்மீரில் உள்ள மாவட்ட அதிகாரிகள்,
துணை அதிகாரிகள், தாசில்தார்கள் யாரும் தங்களது பணி இடத்தை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

3)மேலும் இந்த அதிகாரிகள் தங்களது
செல்போனை ஸ்விச் ஆப் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது….

4)ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி செல்ல ஏர் இந்தியா விமானக் கட்டணத்தை குறைத்து உள்ளது….

READ  இனி தனிக்கொடி ரத்து உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரில் நடக்கப்போகும் 6 முக்கிய மாற்றங்கள் இதுதான் ! கொண்டாட்டத்தில் இறங்கிய இந்தியர்கள் !

நாளை காலை 9.30 மணிக்கு பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டம் நடைபெற இருக்கும் சூழலில் நாளை என்ன அறிவிப்புகள் வெளியாகும் என காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் கலக்கத்தில் உள்ளனர். இதனிடையே தற்போது பாஜக செயல்தலைவர் நட்டா பாஜக பொதுச்செயலாளர் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் காஷ்மீரில் பணியாற்ற சுமார் 500 மருத்துவர்கள் தேவை என்றும் அவர்களை தேர்வு செய்யும் பணி மறைமுகமாக நடைபெற்றுவருவதாக வெளியான தகவல்களால் தற்போது காஷ்மீரில் இருந்து பலரும் வெளியேறிவருகின்றனர்.

ஆனால் இதுவரை தேர்தலுக்கு முன்பு காஷ்மீர் குறித்து பேசிய எந்த தலைவர்களும் தற்போதுவரை இதுகுறித்து வாயே திறக்கவில்லை எப்போதும் சிறுபான்மையினருக்கு அறிக்கைவிடும் ராகுல், ஸ்டாலின், மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, ஆகியோர் இதுநாள் வரை ஒருவார்த்தை கூட பேசாமல் இருப்பது வாயை திறந்தால் நமக்கும் ஏதேனும் பாதுப்புகள் வந்துவிடுமோ என்ற ரீதியில் அமைதியாக இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

READ  இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here