இலங்கையில் உள்ள அனைத்து அரபு மொழி பெயர்களையும் நீக்கவேண்டும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் ஆட்சி மொழியாக செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது சிங்கள மொழி பேசும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்கள் கடைகள் மற்றும் பொதுத்தளங்களில் அரபு மொழியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட சூழலில். தற்போது தமிழ் மக்களும் இதே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இலங்கையில் மட்டக்களப்பு மாநகர சபையின் 20ஆவது பொது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநகர எல்லைக்குட்பட்ட பேனர்களில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை முற்றிலும் அகற்றுதல் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Loading...
READ  வைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்...யார் தெரியுமா..?

இந்த கூட்டம், மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர பிரதிநிதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அண்டை நாடான இலங்கையில் தீவிரவாத நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்தை முழுவதும் வேரறுக்கும் விதமாக இதுபோன்ற மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் முழு ஒத்துழைப்பை இலங்கையில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here