புதுச்சேரியில் நவோதயா பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி ! இந்த பள்ளியைத்தான் வரவிடாமல் தடுக்கிறதா திமுக?

0

பாண்டிச்சேரி.,

நீட் தேர்வு குறித்து மீண்டும் தமிழக மக்கள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது அதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் மீண்டும் நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்தி வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் தமிழக மக்களை முட்டாள்கள் போல் சித்தரித்து திமுக செய்த எதிர்ப்பு பிரச்சாரம் அம்பலம் ஆகியுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டுவரும் நவோதயா பள்ளிகள் உள்ளன.

இவற்றில் பயிலும் 80% குழந்தைகள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரமான கல்வி பயிற்றுவிக்க படுகிறது.

இந்த பள்ளியை இருமொழி கொள்கையை காரணம் காட்டி திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் எதிர்த்துவருகின்றனர். தற்போது புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியில் பயின்ற 23 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் அதில் 23 மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இது போன்ற தரமான பள்ளியைதான் தற்போது தமிழகத்திற்குள் அனுமதிக்கமுடியாது என தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தற்போது தமிழகத்தில் இந்த பள்ளிகள் இருந்திருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வில் சாதித்து இருப்பார்கள் என்றும் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக திமுக இதுபோன்ற போராட்டங்களை நடத்தி அரசு பள்ளி மாணவர்களின் வாழ்கையை சீரழிப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

READ  பெரியார் மண்ணிலா இப்படி ஒரு கொடுமை நடந்தது அறிக்கை வெளியிட்ட வீரமணி

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here