அமிதாப்பஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் , மலையாள சூப்பர் ஸ்டார் என்றால் அது மோகன்லால், அதுபோல மொத்த இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பாலிவுட் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை அமிதாப் பச்சனையே சேரும். இவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் இருக்கின்றனர். 76 வயதான அமிதாப் பச்சனுக்கு 3000 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.

தனது இந்த சொத்துக்களை தனது மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்க இருப்பதாக அமிதாப் தெரிவித்துள்ளார். அமிதாப் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தனது இந்த விருப்பத்தை தெரிவித்து பேசிய அமிதாப், தனது சொத்துக்கள் அனைத்தயும் அபிஷேக் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறினார். மேலும் மகன், மகள் ஆகிய இருவருக்கும் சமமாக சொத்துக்களை பிரித்து கொடுப்பேன் என்று கூறினார்.

READ  கோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் !

இதற்கு முன் ஒருமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் இதனை குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலின சமத்துவம் பற்றி அடிக்கடி பேசிவரும் அமிதாப். தனது மகள் மீதான அதீத அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ” பேடி பச்சாவ் பேடி படாவ் ” என்ற திட்டத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். இது பெண் குழந்தைகளை காப்பதற்கான திட்டமாகும். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை தூதராகவும் அமிதாப் இருந்து வருகிறார்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here