எழுந்து நின்ற அமிட்ஷா பதுங்கிய சிறுத்தை நகர்ப்புற நக்சல்கள் அழிப்பது உறுதி தெறிக்கவிட்ட அமிட்ஷா.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

நடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் உபா சட்டத்தில் வலுவான திருத்தம் மற்றும் அதிகாரம் அளிக்கும் சட்டங்கள் குறித்து விவாதத்தினை முன்மொழிந்து பேசிவருகிறார். மேலும் அதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்தும் வருகிறார்.

முன்பு ஒ வெ சி இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து வலுப்படுத்தபடுவதாகவும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவிக்க உடனடியாக எழுந்த அமிட்ஷா இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் இல்லை தீவிரவாதிகள் மற்றும் பிரிவினையை தூண்டும் தமிழ் அமைப்புகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பாஜக ஜென்ம விரோதி என்பதுபோல் காட்டிக்கொள்ளும் திமுக, பாஜக கொண்டுவந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஆதரித்து வாக்களித்தது. இது தமிழகத்தில் ஒரு பேச்சு டெல்லியில் பேச்சு பேசுவதாக பலரும் திமுகவை விமர்ச்சித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் இருந்து தேர்வாகி சென்ற எம் பி திருமாவளவனும் இடம் பெற்றார்.

தமிழகத்தில் பாசிச பாஜக என்று குரல் கொடுக்கும் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அமிட்ஷா கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பேச்சுக்கள் பலரையும் சிரிப்பில் உட்படுத்தியது. ஆம் பாஜகவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க முடியாமல் புது வழியை கையாண்டிருக்கிறார் திருமாவளவன், நேற்று தனது உரையில் யாருக்கும் வலிக்காத விதமாக தனது உரையை தமிழில் நிகழ்த்தினார் ஆம் அமிட்ஷா உட்பட பலருக்கு தமிழ் தெரியாது எனவே தற்போது தமிழ் மொழியில் தனது உரையை நிகழ்த்தினார் திருமாவளவன்.

READ  பெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே ! சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்.

ஆங்கிலத்தில் உரையை நிகழ்த்தினால் அது அமிட்ஷாவிற்கு புரிந்தால் என்ன மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதற்கு பயந்தே திருமாவளவன் தமிழில் உரையை நிகழ்த்தி இருக்கிறார், தற்போது தமிழக ஊடகங்கள் தமிழில் பேசியதற்காக திருமாவளவனை கொண்டாடியது போல் ஆச்சு அதே நேரத்தில் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பும் இல்லாத நிலையும் ஆகிவிட்டது.

தற்போது தமிழகத்தில் தங்களை சிறுத்தைகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் டெல்லியில் பதுங்கி வருவது தமிழர்கள் மத்தியில் வெளிப்பட தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இவர்களின் முகத்திரை கிழியும் என்று பாஜவினர் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தேசியபாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்கள் பாதிப்பு அடைவதாகவும் அதனால் இந்த சட்டத்தை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார், இதற்கு பதிலளித்த அமிட்ஷா நாட்டில் தீவிரவாதிகள் உருவாவது இல்லை, உருவாக்க படுகிறார்கள், நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள படாது, விரைவில் தீவிரவாதிகள் மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் நகர்ப்புற நக்ஸல்களும் அழிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்க.

READ  இந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி !

திருமாவளவன் போன்றோர் எந்த எதிர்கேள்வியும் எழுப்பாமல் அப்படியே அமைதியாக தனது இடத்தில் அமைதியாகிவிட்டனர். சிறுத்தை நாடாளுமன்றத்தில் பாயும் என்று விசிக தொண்டர்கள் சொல்லிக்கொண்டு இருக்க சிறுத்தையோ அமிட்ஷாவை பார்த்ததும் பதுங்கிவிடுகிறது என்ற கருத்துக்களும் வலம்வருகின்றது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here