20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது…இந்தியாவில் தடை செய்தால் மட்டும் போராட்டமா…அமிட்ஷா கேள்வி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

முத்தலாகிற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. உச்சநீதிமன்றம் தடை விதித்தும் நூற்றுக்கணக்கான உடனடி விவாகரத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இதற்கான சட்டம் அவசியமாகிறது என அரசு தெரிவித்துள்ளது. இதனால் பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமிட்ஷா, முத்தலாக் தடைச் சட்டம் ஆன் ,பெண் என்ற பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.முஸ்லிம்களுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு செய்து வருகிறது என்று சிலபேர் கூறிவருகிறார்கள், ஆனால் இந்த சட்டம் முஸ்லீம் மக்களுக்கு சாதகமானது என்று அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டர். கோடிக்கணக்கான முஸ்லீம் பெண்களின் உரிமைகளை பெற்றுத்தந்துள்ளது இந்த சட்டம், அதுபோக இந்த சட்டத்தை நாட்டிலுள்ள 92% பெண்கள் வரவேற்றுள்ளனர் என்று அமிட்ஷா தெரிவித்தார்.

READ  குறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி ! பாஜகவின் அடுத்த அதிரடி

முத்தலாக் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்பதால், 1922 – 1963 காலத்திலேயே 20 நாடுகள் அதனை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்று அமிட்ஷா கூறினார்.பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக காங்கிரஸ் இதனை நடைமுறையில் வைத்திருந்தது. ஆனால் நாங்கள் அதை முடிவிற்கு கொண்டுவந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

இப்போது நாங்கள் கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தை காங்கிரஸ் வெட்கமின்றி எதிர்த்து வருகிறது, சில சமூகத்தினரை மற்றும் திருப்திப்படுத்தும் சட்டங்களை கொண்டுவருவது, நாட்டின் முன்னேற்றத்தையும், சுய நலனையும் சீர்குலைப்பதாகும் என்று அமிட்ஷா தெரிவித்தார்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here