தீவிரவாதிகளை குறிவைத்தால் திமுக ஏன் பதறுகிறது? . அமிட்ஷா கொடுத்த பதிலடி அடங்கிய ராசா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தீவிரவாதிகளை குறிவைத்தால் திமுக ஏன் பதறுகிறது? அமிட்ஷா கொடுத்த பதிலடி அடங்கிய ராசா?

டெல்லி.,

தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து இந்தியாவில் நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதங்களை தடுத்து வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் இந்திய ஊடகங்களில் விவாத பொருளாக மாறிவர தமிழக ஊடகங்களோ இதுகுறித்த செய்தியை மக்களிடம் சொல்லாமல் மூடி மறைத்து வருவதாக பலரும் குற்றம் சுமத்திவருகின்றன.

Loading...

இந்நிலையில் மத்திய அரசு NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. அதுகுறித்த விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தற்போதைய நிலையில் NIA – விற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதற்கான நோக்கம் என்ன என்றும், இது ஒரு சமுதாய மக்களின் மீது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் கடுமையாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

READ  இனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறை சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு

இதனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அமிட்ஷா ராசாவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சபைக்கும் பதிலளித்தார்

இந்த மசோதா நாட்டின் நலன் தொடர்பானது.

நாட்டில் வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப்டுத்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

நேற்று கூட தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகளில் ஒருவரான செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கு நான் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இது போன்ற பயங்கர வாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. யாரையும் குறி வைத்தோ ,யாரையும் காயப்படுத்தவோ அரசுக்கு நோக்கமல்ல. இதற்கு அனைத்து எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். என்றார் அமிட்ஷாவின் இந்த பதிலிற்கு பின் ராசா வாயை திறக்காமல் அமைதியாகிவிட்டார். மேலும் ராசாவின் கேள்விக்கு பொதுமக்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தற்போது இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் எத்தனை குடும்பங்கள் அழிந்து போயுள்ளன.

READ  மம்தாவிற்கு என்றே தனியாக தபால் நிலையம் அமைப்பு . வச்சு செய்யும் இந்து அமைப்புகள்

இதற்கு தமிழகத்தில் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் இதில் கூட மத அரசியலை திமுக செய்யவேண்டுமா என்றும் நாளை தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலால் யாராவது உயிர் இழந்தால் திமுக அதற்கு பொறுப்பு ஏற்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

மேலும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு திமுக பதில் அளிக்குமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது Whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் Act free என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here