அமிட்ஷா அருகில் பவ்வியமாக நிற்கும் இளைஞர் யாரென்று தெரிந்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள் ! காஷ்மீர் அதிரடிக்கு காரணமானவரும் கூட !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

லடாக்.,

இந்திய அரசாங்கம் பல சரித்திர சாதனைகளை இரண்டு நாட்களுக்குள் நிகழ்த்தியுள்ளது, ஆம் நேற்றிலிருந்து ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனம் மட்டுமின்றி பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கவனமும் இந்திய பாராளுமன்றத்தை நோக்கியே இருந்தன.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்றும், லடாக் பகுதியை சட்ட பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து சட்டத்தையும் இயற்றிவிட்டது மத்திய அரசு.

Loading...

சரிவிஷயத்திற்கு வருவோம் அமிட்ஷாவுடன் சற்று பவ்வியமாக இருப்பவர் வேறுயாருமல்ல லடாக் பகுதியின் மக்களவை எம் பி -ஜம்யாங்_நாம்கியால் , பாஜக சார்பில் லடாக்கில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கல்லூரியில் மாணவர் அமைப்பில் இருக்கும் போதே சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் சதி திட்டம் குறித்து லடாக் பகுதி முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர முயற்சியில் பணியாற்றியவர்.

READ  இனி சத்தம் போடாமல் இந்திய ரயில்கள் ஓடும் ! அசத்தல் மாற்றம்

அப்போது லடாக்கின் பூகோள முக்கியத்துவம் குறித்தும் பல நேரங்களில் மதியஅரசிற்கு எடுத்து கூறியவர், தேசப்பற்றுமிக்க ஜம்யாங்_நாம்கியால் பௌத்த மதத்தை சேர்ந்தவர் , அதனை தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இவருக்கு லடாக்கில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அவரும் வெற்றி பெற்று தற்போது லடாக் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார், தான் சிறுவயதில் இருந்து என்ன என்ன தொல்லைகளை பிரிவு 370 மற்றும் 35 A யினால் அனுபவித்தேன் என்று நேரடியாக பலமுறை நாடாளுமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார்.

தற்போது லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு வழியில் முக்கிய காரணமாக இருந்த ஜம்யாங்_நாம்கியால் ஒரு இளம்வயது (34 ) உள்ளூர் கதாநாயகன் தான்.

லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது குறித்து ஜம்யாங்_நாம்கியால் தெரிவித்த கருத்து பின்வருமாறு.

READ  இதற்காகத்தான் யோகியை உத்திரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் அமிட்ஷா தெளிவான விளக்கம் !

சட்டப்பிரிவு 370-வது நீக்கத்திற்கு எதிராக கார்கிலில் எவ்வித போராட்டமும் நடைபெறவில்லை; 70% மக்கள் இந்த முடிவை வரவேற்கின்றனர்

என் தொகுதியை, யூனியன் பிரதேசமாக, மத்திய அரசு அறிவித்துள்ளது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதும், வரவேற்க தக்க விஷயம்.

இதுவரை, ஜம்மு – காஷ்மீரின் வளங்களை, இரண்டு குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதற்கு, இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதி மக்கள், தங்கள் பகுதியை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும்படி, 1948லிருந்தே வலியுறுத்தி வந்தனர். அதற்கு, இப்போது தான் பலன் கிடைத்துள்ளது,இவ்வாறு, அவர் கூறினார்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  நான் தமிழன் இல்லையா வீரமணிக்கு பொளேர் பதிலடி கொடுத்த பாண்டே ! சிறப்பான சம்பவம். ட்ரைலர் இருப்பதாகவும் எச்சரிக்கை

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here