ரோசம் வந்துவிட்டதாக தமிழர்களுக்கு? அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து ! ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் முடிவு.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

ரோசம் வந்துவிட்டதாக தமிழர்களுக்கு? அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து ! ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் முடிவு.

தேவகோட்டை.,

அறந்தாங்கி நிஷா கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். திமுக சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அறந்தாங்கி நிஷா கடுமையாக பிரதமர் மோடியையும், பாஜக தமிழக தலைவர் தமிழிசையையும் விமர்ச்சித்து பேசினார்.

ஒரு படி மேலே சென்று தமிழிசையை பரட்டை என்றும் படர்தாமரைதான் மலரும் என்றும் படு மட்டமாக பேசினார். நிஷா ஒன்றும் திமுக பேச்சாளர் கிடையாது தனியார் நிகழ்ச்சியில் பங்குபெறும் காமெடி நடிகை அப்படி இருக்கையில் இவ்வளுவு நாட்களாக மனதில் இவ்வளவு வெறியை வைத்துக்கொண்டுதான் தனது நாடக நிகழ்ச்சிகளில் மோடியை விமர்ச்சித்து வந்தாரா என பாஜகவினர் வெளுத்து வாங்கிவிட்டனர்.

குறிப்பாக இன்னும் ஒருபடி மேலே சென்று அவரை திருநங்கை என்று விமர்ச்சித்து ஒரு தரப்பினர் அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தனர்.

READ  இம்ரான் கானிற்கு சிபாரிசு செய்த டிரம்ப் இந்தியா பதிலடி.

இப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் நிகழ்ச்சிக்கு ஆடி மாதம் அறந்தாங்கி நிஷா குழுவினர் பங்கு பெரும் காமெடி நிகழ்ச்சிக்கு ஊர் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் நிஷா தொடர்ந்து இந்து மக்களுக்கு எதிராக பேசுவதாகவும் நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமரை தவறாக விமர்சனம் செய்த காரணத்தால் தங்கள் ஊர் நிகழ்ச்சியில் நிஷா பங்கு பெற கூடாது என இளைஞர்கள் ஊர் பஞ்சாயத்திடம் முறையிட அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை கேன்சல் செய்துள்ளனர்.

மேலும் நிஷா ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் என்பதையும் தாண்டி அவரது காமெடிகளை ரசித்து வந்தோம் ஆனால் அவரது நேற்றைய பேச்சு எங்களுக்கு பிடிக்கவில்லை இனி எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் நிஷா கலந்துகொள்ளும் எந்தக்கலை நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றினர்.

READ  #BREAKING இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வருகிறது இது மோடியின் அதிரடி ! முதலில் எந்த மாநிலம் தெரியுமா?

அதனை தொடர்ந்து தனது வருமானத்திற்கு ஆபத்து வருவதை உணர்ந்த நிஷா உடனடியாக மன்னிப்பு கேட்டதுடன். தனது விடியோவை வெளியிட்ட தனியார் ஊடக நிர்வாகத்தையும் தொடர்புகொண்டு விடியோவை நீக்குமாறு கோரிக்கை வைக்க அவர்கள் நீக்கிவிட்டனர்.

ஆனால் இந்துக்கள் பலரும் நிஷாவின் பேச்சினை நம்பவில்லை, மனதில் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டினை கொண்டுதான் இவ்வளவு நாட்களாக தனது காமெடி நிகழ்ச்சிகளில் நிஷா மத்திய அரசை விமர்ச்சித்து வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் இந்து மதம் பிரதமர் குறித்த விமர்சனத்தை முன்னிட்டு ஒருவரின் நிகழ்ச்சி உடனடியாக கேன்சல் செய்யப்படுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி அவர்கள் கிருஷ்ணர் குறித்த விமர்சனத்தை செய்து பின்பு திருச்சியில் தனது தொண்டர்களின் அடி உதைக்கு உள்ளாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

READ  மன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா? இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள் எச்சரிக்கை?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here