பெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.

0

டெல்லி.,

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லியில் இனி பெண்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் அரசாங்க பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் பணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார்.

கெஜ்ரிவாலின் இந்த இலவச அறிவிப்பினால் ஆண்டிற்கு டெல்லி அரசாங்கத்திற்கு 3500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் இதனால் டெல்லியின் அரசாங்கம் பெரும் இழப்பினை சந்திப்பதுடன் இது மக்களவை தோல்வியை திசை திருப்பி மீண்டும் வெற்றி பெற கெஜ்ரிவால் எடுத்துள்ள கீழ்த்தரமான அஸ்திரம் என்று பாஜக விமர்ச்சித்துள்ளது.

மேலும் கெஜ்ரிவாலின் அறிவிப்பிற்கு அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியவற்றை பார்க்கலாம் :-

டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் -ல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் – கெஜ்ரிவால்

எதற்கு இலவசம் ?

பெண்களாக பிறப்பது இயற்கையிலேயே ஏதேனும் மிகப் பெரும் குறைபாடுகள் கொண்ட பிறப்பா ?

பெண்களாக பிறந்ததாலேயே..அவர்கள் இது போன்ற அரசியல்வியாதிகளிடம் பிச்சை வாங்குபவர்கள் என்று பொருளா ?

ஆண் -பெண் சமம் என்று பேசிக் கொண்டிருக்கையில்..இதென்ன அசட்டுத்தனம் !

மேலும்…இந்த இலவச பயணம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறுவது இன்னொரு வேடிக்கை !

இலவச பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் என்ன சம்பந்தம் ??!

இதில்…கட்டணம் செலுத்தி பயணசீட்டு வாங்கி பயணிக்க விரும்பும் பெண்கள் அவ்வாறே பயணிக்கலாம் என்றும் கூறப் பட்டிருப்பது தான் கவனிக்க வேண்டியது.

இதன் மூலம், எத்தனை பெண்கள் பயணசீட்டு வாங்கி பயணித்தார்கள் என்கிற கணக்கை காண்பிப்பதில் குளறுபடி செய்ய இயலும். ஊழல் செய்ய முடியும்.

இந்தியாவில்…டெல்லி மெட்ரோ தான் லாபகரமாக இயங்கும் ..அதிக மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து.

அதையும் …நிர்வாக ரீதியாக நாசம் செய்து ..ஊழல் செய்யவே இந்த அறிவிப்பு .

IIT Kanpur-ன் சோகம்.

இவ்வாறு பானுகோம்ஸ் கெஜ்ரிவாலின் இலவச அறிவிப்பினை வெளுத்து வாங்கி இருக்கிறார். அவரது கருத்திற்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்துள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here