#BIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை ராணுவம் குவிப்பு சொல்லி அடித்த பாஜக

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

BIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை ராணுவம் குவிப்பு சொல்லி அடித்த பாஜக

ஜம்மு காஷ்மீர்.,

இந்திய மாநிலங்களில் யாருக்கும் இல்லாத ஒரு தன்னாட்சி அதிகாரம் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கியதன் மூலமாகத்தான் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் உருவானதாகவும் இதனால் ஆண்டிற்கு ஒரு மில்லியன் கோடி இந்திய அரசாங்க பணம் பாதுகாப்பிற்கே வீணாவதாக தெரிவித்துள்ளது.

இதனை முடிவிற்கு கொண்டுவரும் பொருட்டு தேர்தலுக்கு முன்பு ஜம்மு பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் இந்திய பிரதமர் மோடி ஒரு வாக்குறுதியை பூர்வகுடி ஜம்மு மக்களுக்கு வழங்கினார். நீங்கள் இனி மிகவும் சுதந்திரமாக இனி உங்கள் பகுதிகளில் வசிக்கலாம், உங்கள் குடும்பத்தாரின் உயிர் தியாகத்திற்கு பலன் கிடைக்க போகிறது என்றும் விரைவில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

READ  ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் !

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் அதனையே குறிப்பிட்டிருந்தது, தற்போது தேர்தலுக்கு பின் பாஜக 303 இடங்களை கைப்பற்றி அரிதி பெரும்பான்மை பெற்றிருப்பதால் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Loading...

நேற்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் 4 மணிநேரம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் நேற்று இரவு முதல் விவாதித்து வருகின்றன.

அதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதன் மூலம் ஏற்படும் போராட்டத்தை அடக்குவது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டதாகவும், ஜம்மு, லடாக், மற்றும் காஷ்மீர் பகுதியினை மூன்றாக பிரித்து சிறப்பு பாதுகாப்பு மண்டலம் உருவாக்குவது என்றும், தங்கள் உரிமைகளை இழந்த இந்து மக்கள் குறிப்பாக பண்டிகளின் நிலத்தினை அவர்களிடமே ஒப்படைப்பது என்று தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கின்றன.

READ  கடற்படையில் தேஜஸ் இணைக்கப்படாது என அதிகாரபூர்வ அறிவிப்பு !! காரணம் என்ன?

இந்த செய்தியினை கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு பாதுகாப்பு அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார், இந்த முயற்சிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூவா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்மறையாக உலகெங்கும் உள்ள இந்துக்கள் குறிப்பாக காஷ்மீர் பண்டிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் எங்கள் நாட்டில் நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறோம் நன்றி மோடி சர்கார் என்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இனி இந்தியாவின் தலையான ஜம்மு காஷ்மீர் பகுதி பிரிக்கப்பட்டால் அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் இதன் மூலம் இனி இந்து மதத்தை சேர்ந்தவர்களே முதல்வராக வரமுடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

READ  #BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை !

அறிவிப்பு வெளியானதும் ஏதேனும் அசம்பாவிதங்கள் வெளியாகாமல் தடுக்க இப்போதே துணை ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

இந்தியாவிலேயே குறைந்த விலையில் உங்களது குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் படம்பிடித்து தரப்படும்
Sponcer ads – CONTACT 9894519894

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here