நாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய கோவில் பூசாரிகள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய கோவில் பூசாரிகள்

இராமேஸ்வரம்.,

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன, அதில் ஒரு பகுதியாக திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மற்றும் பொது மேடைகளில் ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்தார்.

இந்து என்று சொல்லி பார்ப்பனர்கள் அனைவரையும் ஏமாற்றி வருகிறார்கள் எங்கே நாங்கள் கேட்கிறோம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் பிராமணர் அல்லாதோர் பூணூல் போட முடியுமா என்று சவால் விட்டார், அப்படி செய்துகாட்டுங்கள் நான் பொது விவாதங்களில் பங்கேற்பதை குறைத்து கொள்கிறேன் எனும் அளவிற்கு பேசினார்.

அதற்கு பல்வேறு தரப்பினரும் வேத மந்திரங்களை கற்றுக்கொண்ட யார் வேண்டுமானாலும் இந்து மதத்தில் பூணூல் அணியலாம் என்று விளக்கினர் தற்போது அதுகுறித்து நேரடி சாட்சியம் கிடைத்துள்ளது.

READ  மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வகணங்களில் அனுப்பப்படும் நோயாளிகள் வெளியான அதிர்ச்சிகர உண்மை?
Credit – magaram.in

கிராமகோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், 30 ஆண்டுகளாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு ஆகம விதிகளின்படி பூஜை செய்யும் முறை பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. முறையாக ஆகமம் பயின்று, அதை எந்நாளும் கடைப்பிடிப்போம் என்று உறுதியேற்பவர்களுக்கே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது, 51 பயிற்சி முகாம்கள் நிறைவுபெற்று உபநயனம் என்னும் பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 51வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று, இந்து தர்மத்தை தழைத்தோங்கச் செய்ய பாடுபடுகிறார்கள்.

இதில் பங்கேற்ற அனைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சிவகங்கையை சேர்ந்த பூசகர் கண்ணன் என்பவர் பெரியாரிஸ்ட்களை நோக்கி எழுப்பிய கேள்வி பல தரப்பிலும் கவனமாக பார்க்கப்படுகிறது.

READ  வைரமுத்து பாணியில் மண்டியிட்டார் ரஞ்சித் ! எதற்கு இந்த வீண் விளம்பரம் .

அனைத்து சாதியினரும் பூணூல் போடலாம் என்பதை எங்கள் இந்து மதம் நிரூபித்து விட்டது. எங்கே நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம் வார்த்தைக்கு வார்த்தை தலித் விடுதலைக்கு பாடு படுகிறோம் என்று சொல்லும் பெரியாரிஸ்ட்கள் அமைப்புகள், திராவிட கழகம் போன்றவை ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை அங்கு தலைவராக அமர்த்துங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டிருக்கிறார்.

குறிப்பாக இதுவரை தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட திராவிட கழகத்தில் தலைவர் பொறுப்பிற்கு அல்ல வேறு முக்கிய பொறுப்புகளுக்கு கூட வரமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தற்போது அருள்மொழி மற்றும் திராவிட கட்சிகளை சேர்ந்த தலித் மீட்பு இயக்கங்கள் போன்றோர் பதில் சொல்வார்களா இல்லை ஓடி ஒழிந்து கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

READ  திருவாரூரில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் சிக்கினர் ! சிறுவர்களுக்கு மதுவாங்கி கொடுத்து உடைக்க செய்த மதவெறியன்..

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here