இவர் பெரிய ஒழுங்கா கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய பானுகோம்ஸ்!

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாளுக்கு நாள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன, இந்நிலையில் கடந்த வாரம் பெண்கள் மீதான சீண்டல் குறித்து சரவணன் பேச்சை கமல் கண்டிக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வரும் வேலையில்.

சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் கமல்ஹாசனும் சரவணனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இவர் அவரை எப்படி கண்டிக்க முடியும் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Loading...

இதுகுறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :-

உருப்படாத தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி.

ஏதோ கமலஹாசன் பெண்களின் காவலன் போலவும், சரவணன் பேசியதை கண்டிக்காமல் விட்டது தான் தவறு போலவும் பேசுவதில் தான் இருக்கிறது சாமர்த்திய அரசியல்.

READ  கட்டாய மதமாற்றம் செய்தால் இனி தூக்கு அமெரிக்காவிற்கு இந்தியா ஒரே நாளில் பதிலடி.

இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ! இவர் அவரை கண்டித்தால்..அவர், இவரை கண்டிப்பதற்கு ஆயிரம் விஷயங்களை வைத்திருக்கக் கூடும்.

இந்த லட்சணத்தில்…மஹாத்மா காந்தி போல ..இவர்கள் இருவரும் உண்மையை பேசிக் கொண்டார்களாம் !!

இதில்..ஆரவாரித்த கூட்டம் வேறு !

அரசியல் ஆரம்பித்துவைத்த சீரழிவு இது. வெகுஜன மக்களிடையே..மேடைகளில் தலைவன் பேசும் ஆபாச பேச்சுக்களை இலக்கியம் என்று அசடு வழிவதும், தெரு முனை கூட்டத்தில் அதே பேச்சை பேசும் கட்சியின் கீழ் நிலை பேச்சாளனை மட்டும் கண்டிப்பதுமான அபத்தமான இரட்டை நிலை.

அதே தான் இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.

வரலாற்றை புரட்டிப் பார்த்தால்…..

பெண்களை சீண்டியவர்கள் தான் [ சில விதிவிலக்குகள் தவிர்த்து ] இங்கு அரசியல் தலைவர்கள். பெண்களை சீண்டுவது தான் அரசியல் தெருமுனை & பொதுக்கூட்டங்களின் பேச்சுகள். பெண்களை சீண்டியவர்கள் தான் இங்கு ஹீரோக்கள். பெண்களை சீண்டுவது தான் தமிழ் திரைப்படங்களின் முழுநீள கதை. இந்த வரிசையில் கூடுதலாக சேர்ந்திருப்பது தான் உருப்படாத ரியாலிட்டி நிகழ்ச்சி.

READ  ராஜராஜன் இந்து இல்லை என்றால் எதிர்த்திருக்க மாட்டார்கள் ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்த பானுகோம்ஸ் !

இதற்கு பழகி இருக்கும் so called மண்ணின் வெகுஜனம் ஆரவாரிக்காமல் வேறென்ன செய்யும்?!!

இவ்வாறு தனது கருத்தினை பானுகோம்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here