சர்வதேச மல்யுத்த வீராங்கனை பாஜகவில் இணைந்தார்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகட், அவருடைய தந்தையும் மல்யுத்த பயிற்சியாளருமான மகாவீர் போகட் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அரியானா மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் அணில் ஜெயின், அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பாடலா ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களின் வருகை அரியானா சட்டசபை தேர்தலின்போது பாஜகவிற்கு உதவும் என்று கிரண் ரிஜிஜூ கூறினார். இதைபோல் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு பிறகு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

READ  சொன்னதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய பாஜக நாராயணன் திருப்பதி !

தற்போது சர்வதேச விளையாட்டு வீரர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொள்வதால், பாஜக மேலும் சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுக்கிறது. அதனால் இனி 40 ஆண்டுகளுக்கு பாஜகதான் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் என சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here