சுதந்திரத்தினவிழாவில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி ! நிறைவேற்றப்படுகிறது புதிய சட்டம் இது வேற லெவல்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

நாட்டின் 73 -வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, டெல்லியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய உரையினை ஆற்றினார். காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முக்கிய உரை என்பதால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது.

அதனை நிறைவேற்றுவது போலவே அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற அதிரடிகள் தொடரும் என்று கூறியதுடன் நாட்டின் வரலாற்றில் இந்திய ராணுவத்தின் முப்படைகள் இனி ஒருவர் தலைமையில் செயல்படும் என்றும் அது பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Loading...
READ  இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …

இதன் மூலம் சீனா அதிபரின் நேரடி உத்தரவில் ராணுவம் இருப்பதுபோல் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் முப்படைகளும் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்ற அறிவிப்பினை அறிவித்துள்ளார், அத்துடன் இராணுவத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் பிரதமர். இனி முப்படைகளுக்கு தனி தளபதி இல்லாமல் ஒருவரே ராணுவ தளபதியாக நீக்கமிக்கப்படுவார்.

அதனை தொடர்ந்து மீண்டும் எதிர்க்கட்சிகள் கதறும் விதமாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்திய கலாச்சாரம் காக்கப்படும் என்று தெரிவித்ததுடன் இந்தியர் அனைவருக்கும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மிக பெரிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் மதத்திற்கு ஒரு சட்டம் என்பது நீக்கப்பட்டு பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அதிரடி அறிவிப்பினை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். எனவே அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்ற படும் என்று இப்போதே சூசகமாக தெரிவித்துவிட்டார் மோடி.

READ  முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த தமிழிசை ! இதற்குத்தான் தெலுங்கானா சென்றாரா? வீடியோ இணைப்பு

இனி ராமர் கோவில் கட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கிறது?

மேலும் பார்க்க தலையை துண்டித்து விடுவேன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை வீடியோ பார்க்க

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here