#BIGBREAKING ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு சொன்னபடி ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக ! மெகபூவா முப்தி உள்ளே

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீர்.,

இந்திய ராணுவத்தை சேர்ந்த 100 சி ஆர் பி எப் படைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது குவிக்கப்பட்டு வருகிறது, காஸ்மீரில் உள்ள 250 தீவிரவாதிகள் இன்னும் சிறிது காலத்திற்குள் வேட்டையாடப்படுவார்கள் என்று காஸ்மீர் ஆளுநர் மாலிக் சென்றவாரம் தெரிவித்திருந்தார்.

தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்து சட்டத்தை மத்திய அரசு வலுப்படுத்திவரும் சூழலில் காஸ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள், அதன் தலைவர்கள் மற்றும் அடிக்கடி ராணுவத்தின் மீது கல்லெறியும் குழுவினர் ஆகியோரை மொத்தமாக மத்திய அரசு கைது செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டிய பிரிவினைவாத இயக்க தலைவர்களை கைது செய்து வாழ்நாள் வரை சிறையில் இருக்க தற்போது சட்டத்தில் வழிவகை உள்ளதால் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ஆங்கில ஊடகமான republic தொலைக்காட்சி தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

Loading...
READ  இந்திய வீரர் அபிநந்தனை காமெடியனாக மாற்றி இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பரம் செய்யும் பாகிஸ்தான் ஊடகம்( video )

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு எதிராக செயல்படும் இயக்கங்கள், பிரிவினையை தூண்டும் அமைப்புகள் உள்ளிட்டவை ஒட்டுமொத்தமாக நாட்டில் இருந்து துடைத்து எறியப்படும் என்றும் அவற்றிற்கு ஆதரவாக செயல்படும் நபர்கள், ஆகியவற்றிற்கும் கடும் தண்டனை கொடுக்கப்படும் என்று பாஜக தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது.

தற்போது பாஜக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது, விரைவில் தமிழகத்தில் இருந்து இந்திய நாட்டிற்கு எதிராக கருத்து சொல்லும் இயக்கங்கள் அமைப்புகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ்மீரில் 100 பெட்டாலியன் படைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது, இதற்கு உமர் அப்துல்லா, மெகபூவா முப்தி போன்றோர் மத்திய அரசை எச்சரித்துள்ளனர். காஷ்மீர் பிரச்னையில் ராணுவம் நுழைந்தால் வேறுமாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

READ  நல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி !புகைப்படம் உள்ளே

ஆனால் இந்திய படைகளின் நடவடிக்கைக்கு எதிராக யார் இருந்தாலும் அது முன்னாள் முதல்வர்களாக இருந்தாலும் அவர்களையும் கைது செய்ய அரசு தயாராக இருப்பதாகவும், நாட்டிற்கு சவாலான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சமாளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் எந்த பிரச்னையையும் ஒரு கை பார்த்துவிட இந்திய ராணுவம் தயாராக வேட்டைக்கு கிளம்பிவிட்டது. 100 சி ஆர் பி எப் படைகளை காஷ்மீருக்கு அனுப்ப உள்துறை அமைச்சர் அமிட்ஷா அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

இனி இந்திய நாட்டிற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று வெளியான செய்தி இன்னும்சிறிது நேரத்தில் நிறைவேற போகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  #breaking : #சென்னையில் அடுத்தடுத்து #குண்டுவெடிப்பு துணை #ராணுவம் விரைவு

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here