“தல 60” படத்தில் அஜித்துடன் பிக் பாஸ் புகழ் நடிக்கவுள்ளார்….

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘தல 60’ என்ற படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளது. அஜித் தனது அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் நடிக்கத்தான் அஜித் உடல் எடையை குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்த கடந்த வாரம் வெளியேறிய ரேஷ்மா, அஜித்தின் தல 60 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரேஷ்மா அமெரிக்காவில் வசித்து வந்தவர், பிறகு தனது குழந்தைகளை அங்கேயே படிக்கவைத்துவிட்டு, சினிமாதுறையில் இணைவதாக தமிழகம் வந்தார். சில படங்களிலும், சில நாடகங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்போது அஜித்துடன் ரேஷ்மா நடிக்கவுள்ளார், என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

READ  BREAKING சன் டிவி க்கு தடையா? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ! இதற்கும் மோடிதான் காரணமா?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here