பதவியேற்று ஒருமாதம் ஆகவில்லை எடியூரப்பாவிற்கு பாஜக தலைமை கொடுத்த அதிர்ச்சி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்து பா.ஜ. ஆட்சி அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறும் தருவாயில் முதல்வர் எடியூரப்பாவுக்கு பல நெருக்கடிகள் கட்சிக்குள்ளே தோன்றியுள்ளது. மூன்று துணை முதல்வர் பதவி வழங்கும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார் . அவரின் தீவிர ஆதரவாளர்களோ கலக்கமடைந்துள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ. ஆட்சி அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. ஆனால் ஆட்சி தற்போதுவரை முழுமை பெறவில்லை. இம்மாதம் 20 ம் தேதி 17 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர். இவர்களுக்கு தற்போதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர்கள் உமேஷ் கத்தி, ரேணுகாச்சார்யா, அங்காரா, பாலசந்திர ஜார்கிஹோளி, போப்பையா, அரவிந்த லிம்பாவளி உட்பட 20 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் அடைந்துள்ளனர்.

அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதே தினமும் முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தகுதி நீக்க வழக்கு மற்றொரு புறம், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின் கதி என்னவாகும் என தற்போதுவரை தெரியவில்லை. இதற்கிடையில் டெல்லி சென்ற எடியூரப்பா பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பாக பேச படுகிறது.

READ  #BREAKING மதமாறினார் நடிகர் சூர்யா அடுக்கடுக்கான தகவலை வெளியிட்டார் பாலசுப்ரமணிய ஆதித்யன் !

அமைச்சர்களுக்கு பதவி கிடைத்தும் துறைகள் ஒதுக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி உள்ளனர். அவர்களுக்கு நேற்று துறைகள் ஒதுக்கப்படும் என எடியூரப்பவே அறிவித்தார்.ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவை தொடர்ந்து துறைகள் ஒதுக்குவதும் தாமதமாகியுள்ளது.

இதற்கிடையில் கர்நாடகாவில் பாஜகவின் எதிர்காலத்தை கருதியும் முதல்வரின் தன்னிச்சை செயல்பாட்டுக்கு தடுப்பு போடும் வகையிலும் மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பா.ஜ.க மேலிடம் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதுவும் கட்சியின் தேசிய பொது செயலர் பி.. எல் சந்தோஷ் கட்டாயத்தின் பேரில் மேலிடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜாதி வாரியாக ‘குருபர்’ கோட்டாவில் அமைச்சர் ஈஸ்வரப்பா; ‘தலித்’ கோட்டாவில் அமைச்சர் கோவிந்த் கோர்ஜோல்; ‘ஒக்கலிகர்’ கோட்டாவில் அமைச்சர் அஸ்வத் நாராயணா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும்படி டில்லியிலிருந்து தகவல் வந்துள்ளதாக பா.ஜ. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதையறிந்த பா.ஜ. – எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தும் எந்த காரணத்துக்கும் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டாமென நெருக்கடி கொடுக்கின்றனர்.

READ  #breaking கவிழ்ந்தது குமாரசாமி கர்நாடக அரசு ! ஸ்டாலினுக்கு அடித்தது அதிர்ஷ்டம் புரியலையா?

துணை முதல்வர் பதவி உருவாக்கினால் சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடையும் வாய்ப்புள்ளது என கட்சி தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் முதல்வர் தெரிவித்துள்ளார். நட்டா தைரியம் இதற்கு பதிலளித்த அவர் ‘முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ஆட்சி நடத்துங்கள். பிரச்னைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’ என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.வின் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்த போது அசோக் ஈஸ்வரப்பா ஆகிய இருவர் துணை முதல்வராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கர்நாடக பாஜக எடியூரப்பா பின்னால் செல்வதா இல்லை பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் பின்னால் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறதாம், எது எப்படியோ அமிட்ஷா என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ அதன்படிதான் பயணிக்கும் என்று பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

READ  நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி !
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here