காலில் விழுந்த ரகசிய வீடீயோவை வெளியிட்ட பாஜக ! திமுகவிற்கு பதிலடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

நாடுமுழுவதும் ஆயுத புஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, தமிழகத்தில் உழைக்கும் அனைத்து தரப்பினருக்கும் தங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வணங்கி மாறியதை செலுத்தினர்.

தமிழகத்தில் திமுக போன்ற சில இயக்கங்கள் காலம் காலமாக ஆயுத பூஜை பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை, நாத்திக கொள்கையை பின்பற்றி வந்த இயக்கம் என்பதால் திமுக இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் அப்புறம் யாரும் ஆயுத பூஜை வாழ்த்து சொல்லவில்லை என்று சொல்லக்கூடாது என பெரியார் அடையாளம் என திமுகவினர் கூறும் கைத்தடியையும், பூத கண்ணாடி புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்திருந்தார்.

READ  வெளியானது அதிகாரபூர்வ தகவல் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் முதல் எம் பி யார் தெரியுமா?

இந்நிலையில் நாத்திக கொள்கை பேசும் திமுகவினர் எப்போதும் இந்து இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும் தான் விமர்சிப்பார்கள் என்று குற்றம் சுமத்தி வந்த பாஜகவினர், TR பாலு ரகசியமாக வாடிகன் சென்று போப் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் வீடீயோவை வெளியிட்டு, யார் நாத்திகத்தை வைத்து ஆயுத பூஜையை கிண்டல் செய்தாரோ அவரது தந்தை காலில் விழும் வீடீயோவை வைத்தே TRB ராஜாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Loading...

தற்போது காலில் விழும் வீடியோ வெளியான நிலையில் TR பாலு மகன் “TRB ராஜா” பழையபடி சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டாமல் அமைதியாகிவிட்டார், அதனை தொடர்ந்து பலரும் அவரது ட்விட்டர் கணக்கை டேக் செய்து இப்போ பதில் சொல்லுங்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர். கிறிஸ்துவ மதத்தின் தலைவர் காலில் விழுவதுதான் உங்கள் பெரியார் சொன்ன பகுத்தறிவா? ரபேல் விமானத்திற்கு பூஜை போட்டதை கிண்டல் செய்து வரும் திமுகவினர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.

READ  திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு ! உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here