#breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள் பிரதமரை சந்திக்கும் பொன்மாணிக்கவேல் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழகத்தில் ஆண்ட ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இந்து மக்களையும் அவர்களது நம்பிக்கையும் குழிதோண்டி புதைத்தது மட்டுமல்லாமல், பணத்திற்காக பல்வேறு ஈன செயல்களிலும் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி யாக பதவியேற்ற பொன்மாணிக்கவேல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பதுக்கப்பட்ட இந்து கடவுள்களின் சிலைகளை மீட்டு வந்தார், இதற்கு இடையில் பொன்மாணிக்கவேல் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் இடையூறு கொடுக்கப்பட்டதாக அவரே நீதிமன்றத்தில் பலமுறை சொல்லிவிட்டார்.

இதற்கு இடையில் பொன்மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து மாற்றம் செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது ஆனால் இவை அனைத்திற்கும் பொன்மாணிக்கவேல் நீதிமன்றங்கள் மூலம் தீர்வு கண்டார், மேலும் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. அப்போது முதலே தமிழக அரசு பொன்மாணிக்கவேலின் விசாரணைக்கு சரியாக ஆதரவு கொடுக்காமல், பணியிடம் ஒதுக்காமல் பார்த்து கொண்டது இதனை பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளவில்லை.

மாறாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக பொன்மாணிக்கவேல், எதிர்ப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் குடும்பத்தை திரட்டி சுபவீ, விசிக, மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் போராட்டம் நடத்தியது, தற்போதுவரை எந்த ஆதரவையோ, பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு திமுக தெரிவிக்கவில்லை மாறாக சிலைகள் மீட்கப்பட்ட போதுகூட அதனை லாவகமாக தவிர்த்து வருகிறது.

Loading...

இந்நிலையில்தான் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் 1982 ஆண்டு காணாமல் போன நடராஜர் சிலையை பொன்மாணிக்கவேல் மற்றும் குழுவினர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இந்த பயணத்திற்கும் தமிழக அரசு பணம் கொடுக்காமல் அலைக்கழிக்க ஆஸ்திரேலியாவில் நடராஜர் சிலை இருந்த மியூசியத்தின் பதிவாளர் சிலையை தமிழகம் கொண்டுவரும் செலவை ஏற்றிருக்கிறார்.

READ  சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் !

தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த “தஹில் ரகானி ” சிலை கடத்தல் வழக்கை ஆரம்பம் முதல் விசாரித்து வந்த நீதிபதி அமர்வை மாற்றி உத்தரவிட்டதே குற்றவாளிகள் தப்பிக்க, ஜாமீன் பெற உதவியாக இருந்ததாகவும் தற்போது அவர் மேகாலயா மாற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சிலை கடத்தில்வழக்கில் தொடர்புடைய சபதிகள், தொழிலதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது அரசியல் கட்சியினரின் பெயரை மொத்தமாக பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார், மேலும் இவர்களை காக்க பேரம் பேசியவர்கள் உள்ளிட்ட அனைவரது பெயரையும் பொன்மாணிக்கவேல் போட்டுடைத்துவிட்டதால் விரைவில் இந்த வழக்கு தீர்ப்பு வெளியாகி சிலை திருட்டில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் முகத்திரை கிழிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நடராஜர் சிலையை பார்வையிட்டதுடன் அது இந்தியாவிற்கு சொந்தமானது என்று விளக்கியதும் அதனை தொடர்ந்தே சிலையை இந்தியா அனுப்ப ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முறையான நீதி கிடைக்காத பட்சத்தில் பொன்மாணிக்கவேல் பிரதமரின் கவனத்திற்கு குற்றவாளிகள் பெயரை விசாரணைக்கு பின்பு அனுப்பி வைக்க திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் பிரச்சனைக்கு ஒன்று சேராத அரசியல் கட்சிகள் திருடனை காப்பாற்ற திருட கூட்டணி அமைத்து இந்து தெய்வங்களை வேட்டையாடி இருப்பது இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் கூட்டு காலாவணிகளை பொன்மாணிக்கவேல் தோலுரிப்பார் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என்றும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் கோவில் சிலைகளை திருடி சம்பாரித்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

READ  பொறிவைத்து பிடித்த வனத்துறை சிக்கியது சிறுத்தை

சிலை திருடர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி தமிழ் இந்துவில் வந்த தொடர் கட்டுரை என்ன சொல்கிறது தெரியுமா…

சட்டத்தின் ஓட்டைகளையும் பண பலத்தையும் வைத்து இந்தத் திமிங்கலங்கள் தப்பினாலும், தெய்வம் நின்று கொல்லும் என்ற சொலவடை நினைவுக்கு வருகிறது.

 • பால்ராஜ் ஹைதராபாத் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விடுதியில் போலி முகவரி கொடுத்து தங்கி இருந்ததால், அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் மூன்று நாட்கள் வைத்திருந்து, அழுகிய நிலையில்தான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

 • பாகனேரியில் கோயில் சிலைகளைத் திருடிய “தமிழர் விடுதலைப் படை” நாகராஜன், பின்னர் திண்டுக்கல்லில் சைலேந்திர பாபு எஸ்.பி-யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 • சிவபுரம் நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மும்பை தாஸ், 1987-ல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் கொடுக்கப் போனபோது மாரடைப்பில் இறந்து கிடந்தார்.

 • நெல்லை சேதுராமலிங்கம் சிறைக்கு உள்ளேயே தூக்கு மாட்டிக் கொண்டு உயிர்விட்டார்.

 • தூத்துக்குடி உதயகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

 • பகதூர் சிங் லாமா கார் விபத்தில் பலியானார்.

 • திருப்பனந்தாள் ராமசாமி தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

 • நன்னிலம் அருகே துளார் நடராஜர் சிலையைத் திருடிய ராமகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார்.

 • நாச்சியார்கோவிகிருஷ்ணமூர்த்தியும் அவரது மகளும் கண்பார்வை இழந்தனர்.

 • மதுரை மணி கும்பகோணம் கோர்ட்டில் விடுதலை பெற்று வெளியில் வந்த போது பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார்.

 • நெல்லையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தங்கய்யாவை மூன்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம்.

 • முதல் வழக்கில் இருந்து அவர் விடுதலையான நாளில் குற்றாலத்தில் அவரது மகன் விபத்தில் பலியானார்.இரண்டாவது வழக்கில் விடுதலையான அதே நாளில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது வழக்கில் விடுதலையாகி நீதிமன்றத்தைவிட்டு வெளியில் வந்த தங்கய்யா, அந்த இடத்திலேயே பக்கவாதம் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார்’’ … என்று சொன்ன அந்த அதிகாரி,
READ  பிள்ளையார்கோவிலில் நடந்த வீரமணி மகனின் திருமணம் வெளியானது ஆதாரம் வெளுத்து வாங்கும் மருமகள் ! வீடியோ இணைப்பு

“சிலைக் கடத்தல் வழக்குகளைக் கையாளும் போலீஸாரில் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.”

அதேசமயம் மனசாட்சிக்கே பயப்படாத பலரும் இருக்கிறார்கள். கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து கோடீஸ்வரர் ஆன போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள்.

அப்படி பணம் சம்பாதித்தவர்களில் விபரீதமான முடிவுகளைச் சந்தித்தவர்களும் உண்டு.

 • காசிநாதன் என்ற ஆய்வாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

 • சி.வி. ராமன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த ஆய்வாளர் ஜோசப் 1980-ல் பக்கவாதத்தில் முடங்கினார்.

 • ஆய்வாளர் காதர் மொய்தீன் சிலைத் திருட்டு வழக்கு ஒன்றில் போலி சிலைகளைத் தயார்செய்தார். அதை வைத்தே குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர்.

 • தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். பிறகு ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்ட அவர், 1996-ல் ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்’’ என்று சொன்னார்.

 • 35 ஆண்டுகளாக கோயில் சிலைகளைக் கடத்திவிட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வடநாட்டு கோடீஸ்வரர் சுபாஷ் சந்திர கபூரும் தீவிர நோயின் தாக்கத்தில் இருக்கிறார்.

மயிலாப்பூரிலும்,ஸ்ரீரங்கத்திலும் கைவரிசை காட்டியவர்கள் கதி இன்னும் கொடூரமாக நிச்சயம் இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

#ISUPPORTPONMANICKAVEL


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here