#BREAKING அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் காஷ்மீரில் ஏன் ராணுவம் குவிக்கப்படுகிறது தகவல் வெளியானது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஸ்ரீநகர்:

இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகளின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்ய மத்திய அரசு ஆலோசித்து வந்தது, விரைவில் இதில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. காஷ்மீர் நிலவரம் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

Loading...

இந்த நிலையில் கடந்த வாரம் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

READ  H ராஜாவிற்கு குசும்பை பார்த்தீர்களா எப்படி கிண்டல் செய்திருக்கிறார் என்று பங்கம்.

இந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 28 ஆயிரம் பாதுகாப்பு படையினர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இது காஷ்மீர் மாநில மக்களிடம் கடும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது காஷ்மீரில் அமர்நாத் புனித பாத யாத்திரை நிறுத்தப்பட்டு வெளியூர் வாசிகள் காஸ்மீரை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது, இந்த நிலையில் கூடுதல் படைகளை குவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. படை குவிப்புக்கு விடை கிடைக்காததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 10 நாட்களில் காஷ்மீருக்குள் சென்றுள்ள கூடுதல் 38 ஆயிரம் ராணுவ வீரர்களும் காஷ்மீரின் தென் மாவட்ட பகுதிகளில் ரோந்து சுற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களின் நுழைவு பகுதிகள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

READ  நேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி !

காஷ்மீர் நிலவரம் பற்றி சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்தார். அப்போது காஷ்மீரின் வட மாவட்ட பதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை போதாது என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்தே பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக காஷ்மீருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் துணை நிலை ராணுவ படையை சேர்ந்தவர்கள்.

ஏன் மத்திய அரசு காஷ்மீரில் படைகளை குவித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது, அதில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே, ஆகஸ்ட் 6 ம் தேதிக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா இந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் தீர்மானத்தை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவர இருப்பதாகவும், இதுகுறித்து காஷ்மீரில் என்ன போராட்டங்கள் நடந்தாலும் அதனை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

READ  #breaking பிரதமர் மோடி நேரலையில் பேசிமுடித்ததும் காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடியில் இறங்கியது.

இதற்கிடையில் இந்திய ராணுவ தரப்பில் காஷ்மீர் வடக்கு, தெற்கு பகுதிகளில் ரோந்து செல்லும் ராணுவ படையினர் பொதுமக்களை அத்தியாவசிய பொருள்களை 10 நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது காஷ்மீர் 2019 – ம் ஆண்டு முழுமையாக இந்தியாவுடன் இணைவது உறுதிப்படுத்தப்பட இருக்கிறது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here