#breaking பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து இந்திய ராணுவ தளபதி அறிவிப்பு ! வரலாறு மீளப்போகிறதா

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

breaking பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து இந்திய ராணுவ தளபதி அறிவிப்பு ! வரலாறு மீளப்போகிறதா

காஷ்மீர்.,

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது, பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியாகிவிட்டனர்.

இன்று பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்று பிடிபட்டது, ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் ஆயுதங்களுடன் கூடிய லாரி பிடிபட்டது..மேலும் லாரியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்
ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
READ  அமெரிக்க தடையாவது மண்ணாவது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டினார் மோடி ! உலக வல்லரசாக உருமாறும் இந்தியா

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய இராணுவ தளபதியிடம் மத்திய அமைச்சர் ஜிசேந்தர் சிங் இந்தியா விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு இந்தியாவுடன் இணைக்கும் என்று தெரிவித்தது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இந்திய இராணுவ தளபதி அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் இராணுவம் உறுதுணையாக இருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க அரசு உத்தரவிடும் நேரத்தில் இந்திய இராணுவம் களத்தில் இறங்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதியின் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்த இருக்கும் பேரணிக்கு எச்சரிக்கை கொடுப்பதாக பார்க்கப்படுவது மட்டுமின்றி, இராணுவ தளபதியின் அறிவிப்பு பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

READ  சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி !

விரைவில் அடுத்த அதிரடி பாகிஸ்தானியர்களுக்கு காத்திருக்கிறது போல !


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here