ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் !

0

ஸ்ரீநகர்

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஜாமியா மசூதிக்கு முன் கூடிய பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கும்பல்,

Loading...

தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர் மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டு தேடப்படும் தீவிரவாதிகளான,

சாஹிர் முஷா மற்றும் மசூத் ஆசாத்தின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன் அங்கு இருந்த,

பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் , ரம்ஜான் திருநாள் என்பதால் அவர்களின் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் தடுத்து வந்தது பாதுகாப்புப்படை,

நிலைமை மோசமானதால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது , போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஆனாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து நமது இந்திய ராணுவத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

READ  இப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித் !

ராணுவத்தினரின் அமைதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்கியதில் ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர்.

அதனால் வேறு வழியின்றி கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் , தடியடி நடத்தியும் லேசான துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர் இருந்தாலும் அங்கு பதற்ற நிலை தொடர்கிறது

ஆங்காங்கே மறைந்துள்ள போராட்டக்காரர்கள் இந்திய ராணுவத்தினர் மீதும் அவர்களின் வாகனத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here