இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

மத்திய ஆட்சியில் மீண்டும் பாஜக பதவி ஏற்றதில் இருந்து அமைதியாக சில காய்களை நகர்த்தி வருகிறது, குறிப்பாக இந்த முறை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளில் இந்திய நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பணியை ராணுவம் பார்த்துக்கொள்ளும் அதைவிட முக்கியமாக உள்நாட்டில் இருந்துகொண்டு தாய் நாட்டிற்கு எதிராகவும், நாட்டு மக்களிடையே இந்தியாவிற்கு எதிராக பிரிவினை தூண்டுபவர்களை ஒழித்துக்கட்ட மோடி அரசு அதிரடி முடிவெடுத்துவிட்டது.

அதன்தொடர்ச்சிதான் நாடாளுமன்றத்தில் அமிட்ஷா கொண்டுவந்த தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம் மீதான விவாதத்தின் போது நேரடியாக அமிட்ஷா இந்தியாவில் பிரிவினையை தூண்டும்தீவிரவாத அமைப்புகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே நேரடியாக தெரிவித்தார்.

Loading...
READ  இந்து மாணவர்களுக்கு தரை ! முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக பிரித்த மம்தாவின் உத்தரவு !

அதன் தாக்கம் தற்போது தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது, நேற்று மட்டும் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் சுமார் 13 இடங்களில் தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடைய 14 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கபட்டு வருகின்றனர்.

இதுவரை அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்வதாக குரல் கொடுத்த திமுக, சீமான், திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தற்போது போராட்டம் மேற்கொள்ளாமல் அமைதியாகிவிட்டார்கள் அதன் காரணம் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்களை விசாரிக்க செல்லும் NIA அதிகாரிகளை இனி தடுக்க முடியாது அந்த அளவிற்கு NIA அமைப்பிற்கு நாட்டின் பாதுகாப்பு கருதி அதிகாரம் அளித்துள்ளது மத்திய அரசு. அப்படி தடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்.

இனி இந்தியாவில் இருந்துகொண்டு குறிப்பாக இந்தியா பொருக்கி தேசம் என்றோ இந்திய தேசம் குறித்து தவறாகவோ, தனி நாடு கோரியோ குரல் கொடுத்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமல்ல அடுத்து இந்திய நாட்டிலேயே குடியுரிமை இல்லாமல் வெளிநாட்டிற்கு விரட்ட மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது இதன் தொடக்கம் தான் தற்போதைய NIA அதிகாரம் விரிவுபடுத்துதல் என்றும், இதனை தெரிந்துகொண்ட பல போராளிகள் வாயை மூடி அமைதியாகிவிட்டனர்.

READ  நடிகர் பிரகாஷ்ராஜ் க்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்....

எது எப்படியோ மோடி குஜராத் முதலமைச்சராக இருந்து பிரதமராக பொறுப்பேற்ற போது சொல்லிய வார்த்தை என் தாய் நாட்டை கொச்சை படுத்துபவர்களை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று தற்போது அதன் அதிரடியை தொடங்கிவிட்டார் இனி இந்தியா குறித்து தவறாக விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் நாட்டைவிட்டு ஓடுவது உறுதி.

இதனால்தான் சீமான், வைகோ, வீரமணி, தி. காந்தி, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் அமைதியாகிவிட்டார்களா? இல்லை உண்மையை புரிந்துகொண்டு அடங்கிவிட்டார்களா?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here