சொந்த வீடு இல்லாதவரா நீங்கள்…அப்போ அரசே வீட்டு மனை வழங்க உள்ளது…எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைத்தார். அப்போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது. தமிழக மக்களின் மனுக்கள் உடனடியாக கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். அவர்களின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மேலும் 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

முதல்வரின் இந்த விழாவானது , சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் நடைபெற்றது. மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அம்மாவின் அரசு தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மேலும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நேரடியாக சென்று மக்களின் மனுக்களை பெற்று அதற்கு ஒரு மாதத்திற்குல் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

READ  பெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.

வீட்டு மனை இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீட்டு மனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அம்மாவின் ஆட்சி அதனை நடைமுறைப்படுத்தும். மேலும் வயதாகி,உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவி திட்டத்தை அரசு தற்போது செயல் படுத்தி கொண்டிருக்கிறது, அதனை தொடர்ந்து தற்போது புதிதாக 5 லட்சம் முதியோர்களுக்கு கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும், முதல்வர் கூறினார்.

ஏழை மக்கள் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற, இதற்கு முன்பு அம்மாவின் ஆட்சி காலத்தில் 2 லட்சமாக இருந்தது, அதை இப்பொது 5 லட்சமாக உயர்த்தப்போவதாக முதல்வர் அறிவித்தார். மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதி, விவசாயிகளுக்கு உதவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இப்போது தடையில்லாமல் வழங்கி வருகிறோம். மேலும் அனைத்து துறைகளிலும் தமிழகத்தை மேம்படுத்தி நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் …இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Loading...
READ  மண்டை ஓட்டு திருட்டு வழக்கில் சிறை செல்லும் அய்யாக்கண்ணு ஆடிய ஆட்டம் என்ன?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here