பாகிஸ்தானிற்கு ஆதரவாக திடீர் பல்டி அடித்தது சீனா ! இந்தியாவும் பதில் தாக்குதல்

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

மத்திய அரசு அதிரடியாக காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றி உத்தரவிட்டது, இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துவருகிறது.
மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ நா விவாதம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் ஐ நா சபை முதல் அமெரிக்கா, ரஷியா, சீனா, சவூதி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு சாதகமாக உள்நாட்டு விவகாரம் என்றே கருத்து சொல்லி வந்தன, நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என்று கருத்து தெரிவித்தார்.

READ  கேள்வி கேட்ட குற்றத்திற்காக பாண்டேவை தொடர்ந்து மதன் வெளியேற்றம் ? இப்போ நாங்கள் யார் என்று தெரிகிறதா சுபவீ திமிர் பேச்சு

இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் அனைத்து உலக நாடுகளும் இந்தியா பக்கம் நிற்பதாகவும், பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி ஆவேசமடைந்தார் மேலும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்திய சுதந்திரத்தினத்தன்று சமூக வலைத்தளங்களில் கருப்பு புகைப்படத்தினை பதிய கோரியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சீனா வழக்கம்போல் திடீர் பல்டி அடித்துள்ளது அதில் காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து ஐ நா சிறப்பு அமர்வு விவாதம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
தற்போது ஐநா சபைக்கு போலந்து நாடு தலைமை வகிப்பதால் அதனிடம் சீனா வலியுறுத்தியுள்ளது .

இத்தனை அடுத்து இந்தியாவும் பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை மீறினால் இந்தியாவும் ஹாங்காங் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடும் என்று தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

READ  மலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்தது.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here