மம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா – பிரசாந்த் கிஷோர் இடையே இறுதி யுத்தம்- வெல்லப்போவது யார்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இது வாசகர் விஜயகுமார் அருணகிரி என்பவரது சிறப்பு கட்டுரை :-

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா வகுக்கும் வியூகங்களை முறியடிக்க தலையை பிய்த்துக்கொண்டு இருந்த மம்தா பானர்ஜி
கடைசியில் பிரசாந்த் கிஷோர் கைகளில் அந்த பொறுப்பை ஒப்படைத்து உள்ளார்.

2014 ல் மோடியின் வெற்றிக்கு உதவும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்ததாக பிரசாந்த் கிஷோர் அறியப்பட்டாலும் பிஜேபி யில் உள்ள
மோடி அமித்ஷா சுனில் தியோடர் ஹிமந்தா பிஸ்
வாஸ் சர்மா ஆகியோர் முன் பிரசாந்த் கிஷோர் ஜுஜிபி தான் .

நிதிஸ்குமார், ராகுல், ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜிக்கு வேண்டும் என்றால் பிரசாந்த் கிஷோர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம்.
ஆனால் பிஜேபியில் இருக்கும் ஒவ்வொருவரும்
அறிவு ஜீவியே.பிஜேபி தொண்டர்களே இப்படி
அறிவுஜீவி என்றால் எங்களின் தலைவர் அமி த்ஷா எப்படி இருப்பார் என்று சொல்லி தெரிய
வேண்டிய அவசியம் இல்லை.

Loading...

2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார்
பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகங்கள் மூலமாக
வெற்றி பெற்றார் என்று நிதிஷ்குமார் வேண்டும்
என்றால் அவர் கட்சியில் இணைந்துள்ள பிரசாந்த் கிஷோர்க்கு விளம்பரம் செய்யலாம்.ஆனால்
உண்மையில் லாலு தலைமையில் உருவான கூட்டணியில் நிதிஷ்குமார் காங்கிரஸ் என்று
பீகார் அரசியலில் வலிமையான சக்திகள் இருந்ததால் தான் பிஜேபிக்கு தோல்வி ஏற்பட்டது.

READ  இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.

அதே பிரசாந்த் கிஷோர் தான் 2017 உத்தரபிர தேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சமாஜ்வாடி
கூட்டணிக்கு தேர்தல் வியூகம் வகுத்தார். ஆனால்
அமித்ஷா வகுத்த வியூகத்தில் பிஜேபி கூட்டணி
வரலாறு காணாத வகையில் 325 தொகுதிகளை
கைப்பற்றி வரலாறு காணாத வகையில் வெற்றிபெற்றது.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு வகுத்து கொடுத்த வியூகங்களில் 107 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில்
மட்டுமே வெற்றி பெற்றது. எனவே பிரசாந்த் கிஷோர் மண்ணை பொன்னாக்கும் வித்தை தெரிந்தவர் என்றால் காங்கிரஸ் என்கிற மண்
இவருடைய வியூகங்களால் பொன்னாக மின்னி இருக்க வேண்டும்.

ஆனால் இவருடைய தேர்தல் வியூகங்களால்
மண்ணாக இருந்த காங்கிரஸ் மண்ணோடு மண்ணாகி விட்டது. இப்பொழுது கூட ஆந்திரா வில்
ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றி க்கு இவர்
வகுத்து கொடுத்த தேர்தல் வியூகங்களே காரணம் என்று அள்ளி விட ஆரம்பித்து விட்டார்கள்.

சந்திரபாபு நாயுடு இந்த தேர்தலில் மண்ணை
கவ்வுவது உறுதி என்று அரசியல் அறிந்த அத்தனை பேருக்கும் தெரியும் என்கிற பொழுது பிரசாந்த் கிஷோர் வகுத்துக்கொடுத்த வியூகங்களினால் தான் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றார் என்று கூறுவது காமெடியாக இருக்கிறது.

இப்பொழுது மம்தா பானர்ஜியும் மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தனக்கு தேர்தல்
வியூகங்களை அமைத்து தர பிரசாந்த்கிஷோரை
மேற்கு வங்காளத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.பிரசாந்த் கிஷோரும் அடுத்த மாதம் மேற்கு வங்காளம் செல்ல இருக்கிறார்.

READ  நல்லா களி தின்னுங்க கிண்டல் செய்த முதியவர் கடுப்பான கார்த்தி சிதம்பரம் வைரலாகும் வீடியோ

மேற்கு வங்காளத்தில் இதுவரை மம்தா பானர்ஜி
எதிர் கொண்ட து திலிப் கோஷ் என்கிற மேற்கு
வங்காள மாநில பிஜேபி தலைவரின் வியூகங்களை தான். அதையே அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால் வருகின்ற மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தான் பிஜேபி
யின் தேர்தல் வியூகங்களை வகுக்க இருக்கிறார்.

மீண்டும் உத்தரபிரதேச தேர்தல் களத்தில் அமித்ஷாவை பிரசாந்த் கிஷோர் எதிர் கொண்டது மாதிரி மேற்கு வங்காளத்திலும் எதிர் கொள்ள
இருக்கிறார். எனவே முடிவு எப்படி இருக்கும்
என்று இப்பொழுதே கூறி விடலாம்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் அமித்ஷாவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும்
ஆகவே ஆகாது.காரணம் என்னவென்றால் 2014
லோக்சபா தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த வெ ற்றிக்கு நான் தான் காரணம் என்று கூறி அதற்கு
பரிசாக மத்திய அமைச்சர் பதவியை கேட்டார்.

பதிலுக்கு அமித்ஷா தம்பி உன்னுடைய வயசு
என்னுடைய அரசியல் அனுபவம் தெரியுமா?
ஏதோ பிரச்சாரம் ஹைடெக்காக இருக்க வேண்டும் என்று மோடி விரும்பியதால் தான் உன்னை
அழைத்தோமே தவிர உன்னை வைத்து நாங்கள்
ஜெயிக்க அல்ல .எங்களின் கட்சி ஆபிஸ் வாட்ச்
மேன் கூட எங்களின் தேர்தல் வியூகங்களை
வகுக்கும் அளவிற்கு அறிவு படைத்தவர் தெரியுமா? என்று அமைச்சர் பதவியை கேட்ட பிரசாந்த்
கிஷோரை அமித்ஷா விரட்டி விட்டார்.

READ  மோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் !

இதனால் தான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான
பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் லாலுவுடன் சேர்ந்து 2017 பீகார் சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை தோல்வியடைய செய்தார் .பதிலுக்கு அமி த்ஷா உத்தரபிரதேச தேர்தலில் பிரசாந்த் கிஷோர்
என்கிற பெயரே வெளியில் வராதவகையில்
மரண அடி கொடுத்தார்.

இப்பொழுது மேற்கு வங்காளத்தில் மீண்டும்
பிரசாந்த் கிஷோர் பிஜேபிக்கு எதிராக வியூகம்
வகுக்க வருகிறார். அமித்ஷா வும் வழக்கம் போலபதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்.இந்த
மேற்கு வங்காள தேர்தல் முடிவில் பிரசாந்த்கிஷோர் என்கிற தேர்தல் வல்லுனர் இந்திய வரலாற்றில் இருந்த சுவடே தெரியாமல் தோற்கடிக்கப்பட்டு இருப்பார்.

————- END ———————

இதுபோல் நீங்களும் உங்களது கட்டுரைகளை admin@TNNEWS24.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதி அனுப்பலாம்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here