கி. வீரமணியை கைது செய்து தூக்க தடையில்லை நீதிமன்றம் அதிரடி ! கிழித்து தொங்கவிட்ட நீதிபதி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

கி. வீரமணியை கைது செய்து தூக்க தடையில்லை நீதிமன்றம் அதிரடி ! கிழித்து தொங்கவிட்ட நீதிமன்றம் !

கடந்த மே மாதம் சென்னை பெரியார் திடலில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கி.வீரமணி, கடவுள் ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசினார்.

இந்தியாவில் பெரும்பாண்மை மதத்தவர் பின்பற்றும் கடவுளை கொஞ்சமும் பயமின்றி பாலியல் குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பேசினார், இது பெரும்பான்மை இந்து மதத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது, பலரும் வீரமணியை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். குறிப்பாக கிருஷ்ணரை குல தெய்வமாக வணங்கும் யாதவ சமூகத்தினர் வீரமணி மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதனை அடுத்து வீரமணி பேசிய வீடியோ காட்சியை பார்த்த நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீ.ஸ்ரீ ரா தா தாமோதர் ஆலய நிர்வாகி திரு. சீத்தாபதி தாஸ் என்பவர், கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.

Loading...
READ  திருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவி புல்லரிக்கவைத்த சிறுமியின் பேச்சு.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் போலீசுக்கு அதிரடி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசியது, மத நம்பிக்கைகளை இழிவு படுத்தி அவதூறாக பேசியது தொடர்பாக 153, 153 (ஏ), 295 (3), 293, ஐ.பி.சி. 505 (1), தகவல் தொழில்நுட்பம் 66 (ஏ) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வீரமணி மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கு இடையில் விசாரணையின் போது நீதிபதி காவல்துறையினரை கடுமையாக சாடி பேசினார், அனைத்து மதத்தினையும் இழிவு படுத்த கூடாது என்று நமது சட்டம் சொல்கிறது ஆனால் எவ்வாறு இவர்கள் இப்படி பேசுகிறார்கள், ஏன் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

READ  BREAKING முக்கிய பாஜக தலைவர் இருவரை டெல்லிக்கு அழைத்த அமிட்ஷா நாளை அறிவிக்கப்பட இருக்கிறாரா தமிழக பாஜக தலைவர் !

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காவல்துறை தரப்பினர் அமைதி காத்தனர், மேலும் SV சேகர் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய பலரும் இப்போது வீரமணியை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க மறுப்பது ஏன் என்று கடுமையாக விமர்சfனம் செய்து வருகின்றனர்.

மேலும் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் ஆகையால் வீரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் உடனடியாக வீரமணியை கைது செய்யவேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது வீரமணி மீது பதியப்பட்ட வழக்கின் மூலம் வீரமணியை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் அவர் முன்ஜாமீன் வாங்காத நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய சட்டத்தில் தடை இல்லை என்றும் சட்ட வல்லுநர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

READ  பாஜகவில் இணைவது குறித்து மாரிதாஸ் விளக்கம் !


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here