தமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு , முன் ஜாமீன் ரத்து !

0

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குனர் ப ரஞ்சித் , தமிழர்கள் தங்களது பெருமையாக கருதும் ராஜராஜ சோழனை பற்றி தவறான அவதூறு கருத்தை பேசினார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து ரஞ்சித்துக்கு எதிராக பலரும் களமிறங்கினர்.

அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது இதனால் பயந்துபோன ரஞ்சித் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது, மேலும் ராஜாராஜ சோழன் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளம்.

சோழர்களுக்கு கொடுத்து தான் பழக்கம் யாருடைய வாழ்வையும் கெடுத்து பழக்கமில்லை, அதற்கான ஆதாரங்கள் பல கல்வெட்டுகளில் உள்ளது என்று தமிழக அரசு வாதிட்டது.

மேலும் ப ரஞ்சித் தான் எந்த அவதூறையும் பரப்பவில்லை ஜாதி மோதலை தூண்டவில்லை என்றும் வரலாற்றில் உள்ளதை தான் பேசினேன் என்று ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் உள்ளதை பேசினால் எந்த தவறும் செய்யவில்லை என்றால் முன் ஜாமீன் கோருவதன் காரணம் என்ன?

ஒரு ஜாதியினரின் கைதட்டலை பெற மற்றொரு ஜாதியினரை இழிவாக அவதூறு பேசுவதா..என்று கூறி வழக்கை அடுத்த புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

மேலும் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார் , இந்த வழக்கை கவனித்த சட்ட வல்லுநர்கள் ப ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் கிடைப்பது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித்திற்கு ஜாமீன் கிடைக்காமல் கைது செய்தால்தான் பலரும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here