மதம் மாற மிரட்டல் உயிரை விட்ட மகள் ! கம்யூனிஸ்ட்களுக்கு ஓட்டு போட்டு நாசமா போனேன் உங்கள் பெண் பிள்ளைகள் பத்திரம் கதறி அழும் தந்தை.

0

கோவை.

தமிழகத்தில் ஒரு பக்கம் நாடக காதல் மூலம் பெண் பிள்ளைகள் உயிரை மாய்துகொள்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை குறிவைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

அப்படி ஒரு சம்பவம்தான் கோவையில் நடைபெற்றுள்ளது. கோவை நாராயணகுரு கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த அஸ்வினி கங்கா என்ற இந்து பெண்ணை, ஜாபர் என்ற இஸ்லாமிய இளைஞன் லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தி மதம் மாறி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளான்.

இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஸ்வினி தன்னால் மதம் மாற முடியாது என்று சொல்லவே தொடர்ந்து மிரட்ட படுகிறாள், அதனை தொடர்ந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் படித்த கல்லூரியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள ஒரு குடும்பமே தனது மகளை இழந்துவிட்டது.

இந்நிலையில் காவல்துறையினர் பெண்ணின் பெற்றோர் மலையாளிகள் என்பதால் தமிழில் புகார் எழுதி அதில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் தற்போது பெண்ணின் கைபேசி சிக்கி இருப்பதால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிட்டன.

தன் ஒரே பெண்ணை பறிகொடுத்த பெண்ணின் பெற்றோர் நீதி வேண்டி கோவை வீதிகளில் தெரு தெருவாக ஒவ்வொரு இடமாக அழைக்கின்றனர். குறிப்பாக பெண்ணின் தந்தை கூறுகையில் நான் கம்யூனிஸ்ட் எனது வாழ்கையை நான் கொண்ட சித்தாந்தமே சிதைத்துவிட்டது. இந்துக்களுக்கு ஒன்று என்றால் கம்யூனிஸ்ட் வரமாட்டான் இந்துக்களுக்கு எதிரான பிரச்சனை என்றால் முதலில் வருவார்கள்.

தமிழர்களே உங்கள் பெண் பிள்ளைகள் பத்திரம், என் மகளுக்கு ஏற்பட்ட கொடுமை இனி இந்தியாவில் எந்த பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கும் வரக்கூடாது. உடனடியாக குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என்றும் இந்தியாவில் இந்து பெண்கள் பாதுகாப்பாக வாழ வழிவகை செய்யவேண்டும் என்றும் கண்ணீர் விட்டு அழுததை பார்க்கும்போது செய்தியாளர்களே கண்கலங்கிவிட்டனர்.

அஸ்வினி கங்கா என்ற இந்து பெண்ணிற்கு நீதி கிடைக்குமா?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here