“அல்லு விடுகிறதா” உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

நெல்லையில் வயதான தம்பதியினர் இருவர் கொள்ளையடிக்க வந்த திருடர்களை தாங்களே விரட்டி அடித்த சிசிடிவி காட்சி வைரலானதை குறித்து ட்விட்டரில் தமிழ் புலவரான ஹர்பஜன் தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த வயதான தம்பதியினரின் வீட்டில் கடந்த 12 -ம் தேதி காலை 5.30 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். கையில் அரிவாளுடன் மிரட்டிய திருடர்களை அதனை கண்ட தம்பதியினர் சிறிதும் யோசிக்காமல் கொள்ளையர்களை அடித்து விரட்டினர்.

அந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவியது.அவர்களின் துணிச்சலான செயலை அமிதாப்பச்சன் உட்பட பலரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் மற்றும் இணையதள தமிழ் புலவரான ஹர்பஜனும் இந்த வீர தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

READ  பாகிஸ்தான் பெண்ணிற்கு இந்திய குடியுரிமை கிடைத்தது ! போராட்டம் போராட்டம் !

திருட்டு பசங்க எல்லாருக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி,பகைக்கு முன்னாடி புலி-னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிடாங்க.இது தமிழனின் நேர்கொண்ட பார்வை என குறிப்பிட்டு திருடர்களுடன் சண்டையிட்ட வயதான தம்பதியினருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Loading...


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here