தாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு ! கிரிக்கெட் வாழ்க்கை?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத காரியத்தை மகேந்திர சிங் தோனி செய்யவிருக்கிறார் அதில் தான் முன்பு குறிப்பிட்டது போலவே தனது வாழ்க்கையை நாட்டிற்காக அமைத்திருக்கிறார் இந்த அறிவிப்பினை அதிகார பூர்வ அமைப்பான BCCI வெளியிட்டுள்ளது.

சற்றுமுன் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

Loading...

தோனி அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மே.இ.தீவுகளில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்கிறது. இதற்கான அணி வரும் ஞாயிறு அன்று தேர்வு செய்யப்படுகிறது. இதனையடுத்து தோனி அணியில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

READ  #breaking பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து இந்திய ராணுவ தளபதி அறிவிப்பு ! வரலாறு மீளப்போகிறதா

முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி  மேற்கிந்தியத் தொடரிலிருந்து தானாக விலகி இருக்கிறார் என்றும், அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட இருக்கிறார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதனை பிசிசிஐ அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். 
தோனி இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ராணுவத்தில் அதிகம் பற்று கொண்டவர். இவர் இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வாழ்நாளில் கடைசிவரை தேசத்திற்காக உழைப்பேன் என்று தோணி கூறியிருந்தார் அதனை நிரூபிக்கும் பொருட்டு அவரது நடவடிக்கைகள் இருப்பதாக தோனி ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

READ  கடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர் இந்த முறை தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here