தோனி உங்கள் முதல் டியூட்டி இதுதான் ! காஷ்மீரில் உள்ள தோனிக்கு ராணுவம் கொடுத்த அதிகாரபூர்வ உத்தரவு !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீர்.,

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து தரப்பிலான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தற்போது உலகக்கோப்பை தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளியான சூழலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டுமாத ஓய்வில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற காஸ்மீர் சென்றுவிட்டார் தோனி.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ராணுவத்தில் களத்தில் பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பதால் தோனிக்கு பல தரப்பட்ட மக்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவியில் உள்ள தோனி, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு தான் களத்தில் பணியாற்ற அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

அதனை பரிசீலித்த இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத் தோனியின் முதல் அதிகாரபூர்வமான பணியாக வரும் 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் சேர்ந்து தோனி ரோந்து பணிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார் இதனை அடுத்து தோனி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

READ  தேசபக்தியுடன், சுதந்திர தினத்திலிருந்து இதை பின்பற்றுவோம்...ஜெய் ஹிந்த்

தற்போது தோனி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தோனி தற்போது கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல இந்திய மக்களை காத்துவரும் ராணுவ வீரர்களில் ஒருவர்.

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும். அல்லது இங்கு கிளிக் செய்யவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here