மத்திய கூட்டுறவு வங்கியில் திமுக ரூ.100 கோடி ஊழல்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

திமுக ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 2006-2007ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த வங்கியின் கிளைகளில் 100 கோடி ரூபாய் வரை திமுகவினர் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் போரூர், திருவொற்றியூர், பல்லாவரம், அம்பத்தூர் ஆகியவற்றில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில், பொதுமக்களின் சேமிப்பு நிதி, நிரந்தர வைப்பு நிதி, நகைக்கடன், மகளிர் மேம்பாட்டு நிதியில் இருந்து திமுகவினர் ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

READ  ப.சிதம்பரம் வழக்கில் நடந்தது என்ன? புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா!!

இந்த ஊழலால் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப்பணம், பங்கு லாபத்தொகை வழங்க முடியாத நிலையில் வங்கிக்கிளைகள் உள்ளன.

திமுகவினரின் மெகா ஊழல் தொடர்பாக, சிறப்பு அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரித்தது. அதில் 2010 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி, 333 பக்கங்கள் கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கையை விசாரணைக்குழு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவணங்களை மாற்றி அமைத்தல் போன்ற திமுகவினரின் செயல்களால், மத்திய கூட்டுறவு வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் உள்ளவர்களுக்கு வட்டித்தொகை மற்றும் லாபத்தொகை ஆகியவை செலுத்த முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

READ  நடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை !

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here