துரைமுருகன் நீக்கம் முஸ்லிம்கள் குறித்து பேசிய இந்த வீடியோதான் காரணமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

திமுக பொருளாளர் துரைமுருகன் எதார்த்தமாக பேசிய பேச்சுக்கள் இன்று அவரது பொருளாளர் பதவியை பதம் பார்த்து இருக்கிறது, மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துரைமுருகன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம் எல் ஏ அபூபக்கரை கேலியாக விமர்சனம் செய்தார்.

எங்கே தொப்பி உட்கார சொல்லுங்கள் அப்போதுதான் காஷ்மீர் போல இருக்கும் என்று பேசியிருந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகவே தற்போது இணையத்தில் துரைமுருகன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உடனடியாக அவரை பொருளாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யவேண்டும் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

Loading...
READ  டாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்.

இந்நிலையில் துரைமுருகன் வழக்கம் போல் கேலியாகதான் பேசினார், இதுபோல் இந்து மதத்தை திமுகவினர் எத்தனை முறை கேலி செய்திருக்கிறார்கள் ஏன் கனிமொழி, உண்டியலுக்கு எதற்கு பாதுகாப்பு என்று கிண்டல் செய்திருந்தார், துரைமுருகன் மீது நடவடிக்கை எடுத்தால் இந்து மதம் குறித்து பேசிய கனிமொழி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

துரைமுருகன் பேசிய வீடியோ :-

Video credit – jeyaplus

இந்நிலையில் இஸ்லாமியர்களின் எச்சரிக்கைக்கு பயந்து ஸ்டாலின் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க எண்ணியிருப்பதாகவும் அதற்கான உத்தரவு இரண்டொரு நாளில் வெளியாகும் என்று முன்னணி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டிருகிறது.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்னையில் திமுக பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில் தற்போது துரைமுருகன் மீது நடவடிக்கை எடுத்தால் அது திமுக இஸ்லாமியர்களுக்கான கட்சி என்றே முத்திரை குத்தப்படும்.

READ  இனி அத்திப்பழம் வேண்டாம் என்று சொல்வீர்களா?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here