கபாலீஸ்வரர் சிலை திருட்டு வழக்கு திருமகளை பொறிவைத்து பிடித்த பொன்மாணிக்கவேல் சிக்கிவிட்டார் திமுக முக்கிய புள்ளி

0

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான சிலைகள் மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது‌. அதனால், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான புன்னைவனநாதர், ராகு மற்றும் கேது சிலைகளை அகற்றி விட்டு, கடந்த 2004-ஆம் ஆண்டு அதற்கு பதில் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சிலைகள் மாயமானபோது கபாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக இருந்த திருமகளுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறை சந்தேகித்து கைது செய்தது. இதனையடுத்து திருமகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், தான் பணியில் இருந்த 2002 – 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில், எந்த சிலையும் மாற்றப்படவில்லை என கூறியிருந்தார். 

Loading...
READ  நல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி !புகைப்படம் உள்ளே

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், புதிய சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான சிலைகள் மாற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த சிலையும் மாற்றப்படவில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த திருமகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் பொன்மாணிக்கவேல் அவர்களை சிலை கடத்தல் பிரிவில் நியமிக்கப்பட்ட போது, அவர் இந்து சமய அறநிலையத்துறையினரை துன்புறுத்திவதாக திமுக ஆதரவுடன் பெரியாரிஸ்ட்கள் மிக பெரிய போராட்டத்தை நடத்தினர்.

READ  டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

அதில் இந்த திருமகளும் கலந்து கொண்டு பொன்மாணிக்கவேல் மற்றும் h ராஜாவிற்கு எதிராக கோசம் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமகள் சிக்கி இருப்பதன் மூலம் விரைவில் திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர் ஒருவரும் பொன்மாணிக்கவேல் குழுவினரால் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகின்றனர்.

©TNNEWS24

TNNEWE24 செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here