கனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும்  ஊழல் குற்றசாட்டு உடைய அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்பட்டு ஆதரங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் ஒரு குற்றவாளி கூட தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார் அதன் அடிப்படையில் கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 2ஜி வழக்கை விசாரணை செய்துவந்த நீதிபதி சைனியிடம் இருந்து வழக்கு சிதம்பரம் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது, இதுவே திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்த நிலையில் தற்போது திமுக எம் பி ஜெகத்ரட்சகன் மீது அதிரடியாக சிபிஐ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன அதற்கு காரணமாக பார்க்க படுவது.,

READ  ஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.

சென்னை குரோம்பேட்டையில் சுமார் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டு வந்த குரோம் லெதர் ஃபேக்டரி சம்பந்தப்பட்ட நிலம்தான் என்கின்றனர்.

Loading...

இந்த ஆலையில் நிர்வாக ரீதியாக முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார் ஜெகத்ரட்சகன்  பின் சில உள்விவகாரங்களால் அந்த ஆலையை மூடியுள்ளார்.

இந்த ஆலைக்கு சொந்தமான நிலத்தை, 1982-ல் தமிழ்நாடு நகர்ப்புற நில மீட்பு மற்றும் சீரமைப்புச் சட்டத்தின் கீழ் அப்போது அதிமுக  முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமிழ்நாடு அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாராம். பின் அந்த இடத்தினை நீர்வள ஆதாரத்திற்கு பயன்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அடிக்கல்லும் நாட்டினாராம் எம் ஜி ஆர்.

ஆனால் ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் வெற்றிபெற்று எம்.பி.யானதும் அந்த அடிக்கல்லை அகற்றிவிட்டு, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தனது உறவினர்கள் 41 பேருக்கு அந்த இடத்தை பிரித்து கொடுத்துவிட்டாராம்  இது போக ஜெகத்தின் அந்த 41 உறவினர்களும் அங்கே வேலை பார்த்த ஊழியர்கள் என்று அடையாளப்படுத்திட சில ஆவணங்களும் ஜெகத்ரட்சகன் தரப்பில்  ரெடி பண்ணப்பட்டதாம்.

READ  பிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் !

இந்த நிலத்தின் தற்போதைய மார்க்கெட் ரேட் மட்டும்  சுமார் 30 கோடிகளை  தாண்டுகிறதாம்,  இந்த நிலையில், இந்த ஆவணங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கிளைமண்ட் தாஸ் என்பவர் தொடுத்திருக்கும் பொது நல வழக்கில்தான் ஜெகத்திடம் விசாரணை நடத்தும் பொருட்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸால் ஜெகத் ரட்சகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.

அந்த நிலம் தொடர்பான பூர்வீக மற்றும் தற்போதைய விபரங்கள் அத்தனையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆதாரங்களை எடுத்துவிட்டதாம் சி.பி.சி.ஐ.டி. எனவே விசாரணையின் முடிவு ஜெகத்துக்கு எதிராக இருந்தால், அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக அந்த போலீஸ் வட்டாரம் கிசுகிசுக்கிறது.  மேலும் ஜெகத்ரட்சகனின் இலங்கை முதலீடுகள் குறித்தும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் அக்குவேறு ஆணிவேராக அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு சிபிஐ வசம் உள்ளதாக கூறப்படுகிறது .

READ  திமுகவின் புகாரில் முகாந்திரம் இல்லை கைவிரித்தது காவல்துறை. அடுத்த கட்டத்திற்கு சென்ற திமுக மாரிதாஸ் தகவல்

இதனால் திமுகவில் பல அதிரடி சம்பவங்களை நிகழ்த்த மத்திய அரசு தயாராகிவிட்டதாம் மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு வரக்கூடிய நிதி ஆதாரங்களை முடக்கும் நடவடிக்கைகளில் இப்போதே மத்திய அரசு இறங்கிவிட்டதாம்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here