பெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை ஆளாய் பதிலடி கொடுத்த ஓ பி ஆர்

0

கடந்த ஏப்ரல் மாதம் 18 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி வெளியானது.

அதில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது, தேனி தொகுதியில் மட்டும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமார் வெற்றி பெற்றார்.

Loading...

இந்நிலையில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதிவியேற்று கொண்டனர் அப்போது திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள்

வாழ்க பெரியார் என்று கூறி பதவியேற்றனர் அதன் பின்னர் பதவியேற்ற அதிமுகவின் ரவீந்தர்நாத் குமார் வாழ்க எம் ஜி ஆர் , ஜெயலலிதா , வந்தே மாதரம் என்று கூறி பதவியேற்றார்.

READ  தமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது?

வாழ்க பெரியார் என்று திமுகவினர் கூறியபோது அமைதியாக இருந்த பாராளுமன்றம் ரவீந்தர்நாத் வந்தே மாதரம் என்று கூறியதும் ஆரவாரத்தில் திளைத்தது.

திமுகவினரை தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கை தட்டி ரவீந்தர்நாத்தை உற்சாகப்படுத்தினர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here