திமுக சரவணன் மீது தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாய்கிறது…NIA அதிரடி

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

இரண்டு நாட்களுக்கு முன்பு Republic சேனலில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், காஷ்மீர் இந்தியாவின் பகுதியே கிடையாது என்று சொல்லி பெரிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இதற்கு நாடுமுழுவதிலும் இருந்து திமுகவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் திமுகவை நெட்டிசன்கள் உருட்டி எடுத்துவிட்டனர். ஏற்கனவே காஷ்மீர் பிரச்னையின்போது, பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள், லடாக் எம்.பி.யிடம் நல்லா வாங்கி கட்டி கொண்டார்கள் , இருந்தும் அவர்கள் திருந்தவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்றது.

READ  பேசி ஒருமணி நேரம் ஆகவில்லை இப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்திட்டாரே ரவீந்திரநாத்.

திமுக செய்தி தொடர்பாளர் சரவணனின் இந்த பேச்சுக்கு தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று பேசப்பட்டது .

மேலும் நேற்று நாடே சுதந்திரதினம் கொண்டாடியது, ஆனால் திமுக சுதந்திரத்தினத்தை புறக்கணித்தது. திமுகவின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுக, நாட்டின் இறையாண்மையை மதிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் சமூகவலைத்தளங்களில் திமுகவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர்.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் சரவணனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டு army friends இயக்கம் NIA அலுவலகத்தில் புகார் அளித்தது. மேலும் பல்வேறு முன் வழக்குகளையும் சுட்டிக்காட்டி வழக்கின் தன்மையை எடுத்து கூறியது.

இதனால் NIA சரவணனின் பேச்சின் சாராம்சம் இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், உள்நோக்கத்துடன் நாட்டில் பிளவுகளை உண்டாக்கும் நோக்கத்தில் சரவணன் பேசியிருப்பதாக NIA வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் சரவணன் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

READ  இன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக போராடியது பலன் இப்போதெரியுதா?

வழக்கிற்கு உறுதுணையாக இருந்த armyfriends குழுவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here