வீடியோ வெளிவராமல் இருக்க ஊடகங்களை விலைக்கு வாங்கியதா திமுக? தமிழ் வாழ்க கோசம் போட்ட கனிமொழி எங்கே?

0

சென்னை.,

தமிழ் மொழி குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியயதாக திமுக பெருமை கொண்டிருந்த நிலையில் தற்போது ஆந்திர மக்களிடையே தமிழர்களை தலைகுனிய செய்துள்ளது திமுக.

Loading...

தமிழ் மொழி பாதுகாவலர்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய திமுக தற்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழுக்கு சிறுமையை ஏற்படுத்தும் விதமாக தனது கட்சியை சேர்ந்த எம் எல் ஏ மூலம் செய்துகாட்டியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் தெலுங்கில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எனக்கு தமிழ் மொழி பேச வராது என்பதுபோல் தன் முக அசைவை வெளிப்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து இது தமிழர்களுக்கான மன்றம் எங்களுக்கு தெலுங்கு தெரியாது தமிழில் பேசுங்கள் என்று சொல்கிறார்.

ஆனால் அதுவரை எந்த திமுக உறுப்பினரும் அவரை தமிழில் பேச சொல்லவில்லை, இந்நிலையில்தான் சமூகவலைத்தளத்தில் ஆந்திராவை சேர்ந்த பிரபந்த் என்பவர் புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ராம்குமார் என்ற தமிழக மாணவனை அவமானப்படுத்தியுள்ளார்.

அதில் உங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்வது எங்கள் தெலுங்குமொழிதான் என்றும் இதுபோல் ஆந்திர சட்டசபையில் அல்லது தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக சட்டசபையில் ஒரு தமிழர் தமிழில் பேச முடியுமா? எப்போதும் தமிழ் மொழியும் தமிழர்களும் ஒரு படி கீழே என்று பிரபந்த் தமிழரான ராம்குமாரிடம் சொல்லி அவமானப்படுத்தியிருக்கிறார்.

READ  டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

வேதனை பட்ட ராம் குமார் தமிழகத்தில் முக்கிய ஊடகங்களை தொடர்புகொண்டு தனக்கும் தமிழுக்கும் நேர்ந்த அவமானத்தை சொல்லி, திமுகவின் பச்சை துரோகத்தை விளக்கவும் கடந்த இரண்டு நாட்களாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதுகுறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை, ஏன் சென்னை IIT -யில் கணபதி பாடல் பாடப்பட்டதற்கு குரல் கொடுத்த எந்த அமைப்புகளும், ஊடகங்களும் திமுகவின் வரலாற்று துரோகத்தை நினைவு படுத்தாமல் மூடி மறைத்து வருவதாகவும் ராம் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்திக்கு தமிழ் அமைப்புகள், தலைவர்கள், தமிழ் ஊடகங்கள் பதில் அளிக்குமா இல்லை இதையும் மூடி மறைக்குமா என்று தெரியவில்லை.

மேலும் ஸ்டாலின், கனிமொழி போன்றோர் இந்த வீடியோ குறித்து பதில் அளிப்பார்களா இல்லை நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க கோசம் போட்டுவிட்டு தமிழகத்தில் தெலுங்கு வாழ்க கோசம் போடுவார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

READ  வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி !

தமிழ் மொழி பாசம் பாஜகவை எதிர்க்கமட்டும் தானோ?

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here