ஏன் ரபேல் விமானத்தில் ராஜ்நாத் ஓம் என்று எழுதினார் தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஏன் ரபேல் விமானத்தில் ராஜ்நாத் ஓம் என்று எழுதினார் தெரியுமா?

சமூகவலைத்தளங்களில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கட்டுரைகள் மூலம் விளக்கம் அளிக்கும் விஜயகுமார் ஏன் ரபேல் விமானத்தில் ராஜ்நாத் ஓம் என்று எளிதினார் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

புதியதாக பெறப்பட்ட ரஃபேல் விமானத்தில்
மதசார்பற்ற நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஓம் என்கிற இந்துக்களின் அடையாளத்தை
எப்படி எழுதலாம் என்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சிம்பிளா ஒற்றை வார்த்தையில் ஆமாம் அப்படித்தான் எழுதுவோம் என்று பதில்சொல்ல முடியும். ஏனென்றால் இதுவெல்லாம் பிஜே பிஆட்சியில் நடக்கும் நடக்க வேண்டும் என்று மக்களே விரும்பி தான் 303 தொகுதிகளில் பிஜேபியை வெற்றி பெற வைத்து தனி மெ ஜாரிட்டியுடன் மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்.

Loading...

இதையெல்லாம் செய்யவில்லை என்றால் தான் அவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் திட்ட
ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் ஓம் என்பது
பிஜேபிக்கு வாக்களிக்கும் இந்துக்களின்
அடையாளம். இந்துக்களின் அடையாளத்தை
இந்துக்களால் வெற்றி பெற்ற ஒரு கட்சியின்
அமைச்சர் வெளிப்படுத்தியதில் என்ன தவறு?

READ  #BIGBREAKING ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு சொன்னபடி ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக ! மெகபூவா முப்தி உள்ளே

இன்னொரு விசயம் என்னவென்றால் ஓம்
என்கிற வார்த்தை இந்து மதத்தின் ஆதார மந்திரம் மட்டுமல்ல.இந்த பிரபஞ்சத்தின் அடையாளம்.உலகில் எந்த ஒரு மொழியிலும் மதத்திலும் இல்லாத வார்த்தை ஓம். இந்த ஒற்றை வார்த்தை தான் இந்த உலகத்தையே
இயக்கி வருகிறது.

இந்த உலகம் இயங்குவதற்கு சூரியனே ஆதாரம் என்பதை விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் ஒருமித்தே கூறுகின்றன. எனவே சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே கிடையாது என்பதை இந்த உலகில் வாழும் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்த சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து
ஒரு சத்தம் வந்து கொண்டு இருக்கிறது. அது
ஓம் என்கிற ஒலியை போன்று இருக்கிறது
என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.நல்லா
கேட்டுக் கொள்ளுங்கள்.இதை கூறுபவர்கள்
மோடியோ அமித்ஷாவோ அல்லது ராஜ்நாத்சிங்கோ அல்ல, பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பிரிட்டனில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலை வரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை 2010 ம் ஆண்டில் கண்டறிந்தனர்.

READ  மதுரை சுத்துப்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ! நீங்கள் எதிர்பார்த்த வேலை தொடங்கியாச்சு !

சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளி வரும் அந்த ஒலியானது ஏதோ ஒரு இசையை போல இருப்பதாக ஷெபீல்ட் பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர்கள் கூறி வந்தார்கள்.
ஆனால் அது எந்த மாதிரியான ஒலி என்பதை மட்டும் அவர்களால் கூற முடியவில்லை.

இதற்கு பிறகு2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நாசா
ஆய்வு மையம் சூரியனின் வளிமண்டலத்தில் எழுந்து வரும் ஒலியை பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்து கடைசியில் வாயேஜர்-1 என்கிற அறிக்கை வெளியிட்டது.

இதில் சூரியனில் இருந்து ஓம் என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது.இதற்
காக அந்த ஒலி அமைப்பையும் “Interstellar plasma music” என்ற ஆடியோ ஆல்பத்தின்
மூலமாக வெளியிட்டு சூரியனின் வளிமண்டலத்தில் ஓம் என்கிற ஓங்கார சத்தம் கேட்டுக் கொ ண்டு இருக்கிறது என்று கூறினார்கள் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயன்படுத்தி வந்த “ஓம்” என்கிற பிரணவ மந்திரம் சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற த்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசா வின் விஞ்ஞானிகள் கூறிய பிறகும் ஓம் என்கிற அடையாளம் எப்படி இந்து மதத்தின் அடையாளமாக மட்டும் இருக்க முடியும்?

READ  காவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்!

ஓம் என்கிற மந்திரம் இந்த உலகின் அடையாளம்.ஆரம்ப காலத்தில் இந்து மதம்தான் இந்த உலகில் இருந்தது. இந்து மதத்தின் ஆணி வேரான வேதங்கள் தான் உலகின் அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம்.
இதை நான் கூறவில்லை. கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி என்று உலகம் போற்றும் அமெரிக்காவின் நிக்கோலஸ் டெஸ்லா கூறுகிறார்.

இதனால்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஓம் என்று எழுதி பெற்றுக்கொண்டார் என்று விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here