தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமா கொலையா ஆறுமுகம் சாமி ஆணையம் தகவல் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அப்போதைய முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் இருந்த பலர் இணைந்து சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் தரப்பு இணைந்ததே அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் முன்னாள் நீதிபதி ஆறுமுகம்சாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அப்போல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தது, இந்த நிலையில் இன்று ஆறுமுக சாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

READ  கொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொள்ளாதீர்கள் வீரமணி எச்சரிக்கை.

அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தங்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்கக்கூடாது என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்து தடை பெற்றது, இந்நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவின் மரணத்தில் அப்போல்லோ நிர்வாகம் பலவற்றை மறைகிறது, தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமலும், சிகிச்சை முறைகள் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவலை அப்பல்லோ அளித்துள்ளது.

இதனால் விசாரணையில் உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் தொடர்ந்து தடைவாங்கி வருகிறது, எனவே வழக்கு விசாரணைக்கு அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்து ஆஜராகும் விதமாக தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தற்போது இந்த தகவல் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவரது மரணம் இயற்கையா இல்லை கொலையா என்ற கோணத்தில் மீண்டும் அதிர்வலைகளை எழுப்ப தொடங்கியுள்ளது.

READ  என்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை வச்சாங்க ஆப்பு ! தமிழகத்திலா இப்படி ஒரு மாற்றம்

அப்பல்லோ நிர்வாகத்திற்கு இதில் மிக பெரிய பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்துஒ பி எஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ?

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here